Skip to content
Part 1 of 2

பக்கம் 1

ஸஹாபாக்கள் பற்றிய அஹ்லுஸ்ஸுன்னாவின் கொள்கை

ஸஹாபாக்கள் பற்றிய அஹ்லுஸ்ஸுன்னாவின் கொள்கை - ஷெய்க் அப்துல் முஹ்ஸின் அல் அப்பாத்

நூல் : அகீதது அஹ்லுஸ்ஸுன்னா வல் ஜமாஆ பில் ஸஹாபா கிராம்

அஹ்லுஸ்ஸுன்னதி வல் ஜமாஅத்தினரிடம் ஸஹாபாக்கள் பற்றிய கொள்கையும் நிலைப்பாடும் நடுநிலையானதாகும். இந்நடுநிலை தீவிரமான இரு பக்கங்களில் எதனையும் சாராத நடுநிலையாகும். இவ்விரு தீவிரமான போக்குகளில் ஒரு பக்கம்  ஸஹபாக்களை அவர்களின் தரத்தை விடவும் உயர்த்தி அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கொடுக்க வேண்டிய இடத்தைக் கொடுத்து அவர்களின் மதிப்பதில் தீவிரப் போக்கை மேற்கொள்வது. 

இது அஹ்லுஸ்ஸுன்னதி வல் ஜமாஅத்தின் நிலைப்பாடல்ல. அதே போன்று இன்னொரு பக்கம் அந்த ஸஹாபாக்களை மட்டந்தட்டிக் கொண்டு அவர்களைக் குறைகூறிக் கொண்டு அவர்களைத் திட்டிக் கொண்டு அவர்களின் அந்தஸ்தைக் குறைத்து விடுவது. இவ்விரு தீவிரப் போக்கிலிருந்தும் அஹ்லுஸ்ஸுன்னதி வல் ஜமாஅத்தினர் தவிர்ந்திருக்கிறார்கள். 

இவ்விரண்டுக்கும் இடைப்பட்ட நடுநிலையிலேயே அஹ்லுஸ்ஸுன்னதி வல் ஜமாஅத்தினர் இருக்கிறார்கள். அதாவது ஸஹாபாக்களை இழிவுபடுத்துவதுமில்லை. அவர்களை அல்லாஹ்வை விடவும் அவனுடைய தூதரை விடவும் மதிப்பில் உயர்த்துவதுமில்லை. இவ்விரு போக்குகளும் தவறான போக்குகளாகும்.

 

அஹ்லுஸ்ஸுன்னதி வல் ஜமாஅத்தினர் ஸஹாபாக்கள் அனைவரையும் நேசிக்கிறார்கள். இன்னும் அவர்களை எந்த அந்தஸ்தில் வைப்பது நீதியானதோ அந்த அந்தஸ்தில் வைத்து விடுவார்கள். அந்த அந்தஸ்தின் எல்லை எதுவாக இருக்கிறதோ அந்த எல்லைக்கு மேல் உயர்த்தமாட்டார்கள். அதே போன்று அந்த ஸஹாபாக்களின் அந்தஸ்தைக் குறைத்துக் கூறவுமாட்டார்கள். அஹ்லுஸ்ஸுன்னாவின் நாவுகள் எப்போதுமே ஸஹாபாக்களைப் பற்றி நல்லதையே பேசுவதாக இருக்கும். அவர்களின் உள்ளங்கள் ஸஹாபாக்கள் மீதான நேசிப்பினால் நிறைந்திருக்கும்.