About us
بــــــــــــــــســـــم الله الرحـــــــمــــن الرحـــــــــيــم
الحمد لله رب العالمين والصلاة والسلام على من لا نبي بعده اما بعد
உஸ்மான் இப்னு அஃப்பான் நூலகம் அல்-குர்ஆன், அஸ்-ஸுன்னாஹ்வை ஸஹாபா என்ற ஜமாஅத் எவ்வாறு விளங்கி செயல்படுத்தினார்களோ அந்த கல்வியைக் கற்று செயல்படுத்தி மக்களுக்கு மத்தியில் பரவலாக்குவதற்காக நிறுவப்பட்டதாகும். அல்லாஹ்வின் வார்த்தைக்கும் நபி ﷺ அவர்களுடைய வார்த்தைக்கும் ஸஹாபாக்களின் பாதைக்கும் தான் நாங்கள் முக்கியத்துவம் கொடுக்கிறோம். இந்த அடிப்படையில் மக்களுக்கு வழிகாட்டும் உலமாக்களுடைய கல்வியை தமிழ் பேசும் முஸ்லிம்களுக்கு கொண்டு சேர்ப்பதற்காக நூல்கள், கையேடுகள் போன்றவற்றை வெளியிட்டுக் கொண்டிருக்கிறோம்.
மேலும் இந்த அடிப்படையில் அஹ்லுஸ் ஸுன்னாஹ் உலமாக்களிடம் மார்க்க்க் கல்வியை பயின்று அழைப்புப் பணியில் ஈடுபட்டிருக்கக் கூடிய அஷ்-ஷெய்க் யஹ்யா ஸில்மி ஹஃபிழஹுல்லாஹ் அவர்களுடைய வகுப்புகள், சொற்பொழிவுகள், விளக்கவுரைகள், ஃபத்வாக்கள் போன்றவற்றை இந்த இணைய தளத்தில் அல்லாஹ்வின் நன்மையை நாடி தொகுத்துக் கொண்டிருக்கின்றோம்.
உஸ்மான் இப்னு அஃப்பான் நூலகம்,
2/18, இப்ராஹீம் தெரு,
ஆலந்தூர்,
சென்னை - 600016.
தொலைபேசி: +91 99623 15876
மின்னஞ்சல்: cist@ahlulhadith.in