Biography
بــــــــــــــــســـــم الله الرحـــــــمــــن الرحـــــــــيــم
الحمد لله رب العالمين والصلاة والسلام على من لا نبي بعده اما بعد
அஷ்-ஷெய்க் அபூ அப்துர் ரஹ்மான் யஹ்யா ஸில்மி அவர்கள் இலங்கையில் பிறந்தார்கள். அவர்களுடைய தந்தை சவூதி அரேபியாவில் பணியாற்றியதால் சிறுவயதிலேயே அங்கு சென்றுவிட்டார்கள். அவர்களுடைய மார்க்க கல்வியையும், உலகக்கல்வியையும் அந்த நாட்டிலேயே கற்றார்கள்.
அவர்கள் மாணவராக இருந்த காலத்தில்தான் இந்த நூற்றாண்டின் மிக முக்கியமான உலமாக்களான ஷெய்க் அல்பானி, ஷெய்க் இப்னு பாஸ், ஷெய்க் இப்னு உதைமின் ஆகியோர்களின் கல்வியும் பணியும் அறிஞர்களுக்கு மத்தியிலும், மக்களுக்கு மத்தியிலும் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தது.
இப்படிப்பட்ட உலமாக்களுடைய சபைகளில் பயன் பெறுவதற்கான வாய்ப்பு அவர்களுக்குக் கிடைத்தது. மேலும், அவர்கள் மாணவராக இருந்த காலத்தில் அந்த நாட்டில் வாழ்ந்த பல உலமாக்களின் சபைகளில் இருந்து கல்வியைப் பெற்றுக்கொண்டார்கள். மேலும் இவர்களுடைய கல்வியையும், அழைப்புப்பணியையும் கண்டு இவர்களை மார்க்கப் பிரச்சாரம் செய்வதற்குப் பல உலமாக்கள் சிபாரிசு (தஸ்கிய்யா) வழங்கி இருக்கிறார்கள். இவர்கள் கல்வி பயின்ற உலமாக்களின் சுருக்கமான அறிமுகத்தைக் காண்போம்.
ஷெய்க் யஹ்யா சில்மி அஸ்-ஸைலானி அவர்களின் கல்வி:
1. ஷெய்க் முஹம்மத் நாஸிருத்தீன் அல்-அல்பானி
இன்றைய காலத்தில் ஹதீஸையும் ஃபிக்ஹ் கொள்கையையும் ஸலஃபின் அடிப்படையில் சுமந்த இமாம் நாஸிருத்தீன் அல்-அல்பானீ அவர்களின் சபையில் அமர்ந்து நேரடியாக இஸ்லாமியக் கல்வியை ஸஹாபா விளக்கத்தோடு பெற்றுக்கொண்டார். இமாமவர்கள் ஜித்தாவிற்கு வருகை தந்திருந்த பொழுது அவரிடம் ஷெய்க் யஹ்யா அவர்கள் பயன் பெற்றுக்கொண்டார்கள். மேலும் 1997 வரை, ஷெய்க் அல்-அல்பானியுடைய அனைத்து அச்சிடப்பட்ட புத்தகங்கள் மற்றும் ஒலிநாடாக்களின் மூலம் நன்றாக படித்து பயன்பெற்றவர்.
2. ஷெய்க் அப்துல் அஸீஸ் பின் அப்துல்லாஹ் பின் பாஸ்
சவூதி அரேபியாவின் முந்திய முஃப்தியாக இருந்த ஷெய்க் அப்துல் அஸீஸ் இப்னு அப்துல்லாஹ் இப்னு பாஸ் அவர்களின் சபைகளில் நேரடியாக அமர்ந்தும், ரமலான் மற்றும் ஹஜ்ஜுடைய காலங்களில் அவர்களின் சபைகளில் தொடர்ச்சியாகப் பத்து ஆண்டுகள் மார்க்க விளக்கங்களைப் பெற்றும் தயாரானார்கள். இமாமவர்கள் ஜித்தா, ரியாத், மக்காவில் இருந்தபொழுது அவரிடம் ஷெய்க் யஹ்யா பயன்பெற்றுக்கொண்டார்கள்.
3. ஷெய்க் மஹ்மூத் மஹ்தி அல்-இஸ்தன்பூலி
அகீதா மற்றும் மன்ஹஜ் மேலும் ஸலஃப் வழிமுறைக்கு ஷெய்க் யஹ்யா ஸில்மி அவர்களின் முதலாவது ஆசிரியர் இவராவார். ஷெய்க் அல்பானியின் கல்வியோடு ஷெய்க் யஹ்யாவை அறிமுகப்படுத்தியவர் ஷெய்க் மஹ்மூத் மஹ்தி. மேலும், அவர்களின் வீட்டில் நேரடியாக அவர்களுடைய வழிகாட்டுதலில் இப்னு கஸீர், ரவ்லத்துன் நதியா, ஃபிக்ஹ் ஸுன்னாஹ் மற்றும் பல நூல்களை விளக்கத்துடன் கற்றார்கள்.
4. ஷெய்க் அப்துல்லாஹ் அஸ்-ஸொமாலி
இவர் ஷெய்க் முக்பிலின் ஆசிரியர் இவர்களிடம் ஸஹீஹுல் புகா£¦யின் பாடங்களைத் தாருல் ஹதீஸ் பல்கலைக்கழகத்தில் படிக்கும்பொழுது நேரடியாகப் பெற்றுக்கொண்டார்கள்.
5. ஷெய்க் முஹம்மத் பின் ஸாலிஹ் அல்-உஸைமீன்
மக்காவிலுள்ள ஹரமில் ரமலானுடைய கடைசி 10 இஃதிகாஃபுடைய நாட்களில் நடைபெற்ற வகுப்புகளில் ஷெய்க் யஹ்யா அவர்கள் கலந்துகொண்டார்.
6. ஷெய்க் பின் ஹுமைத்
இவர் தாருல் ஹதீஸ் கைரிய்யாவில் படித்துக் கொண்டிருந்தபொழுது இமாம் ஷவ்கானியின் நைலுல் அவ்தார் விளக்க வகுப்புகளில் ஷெய்க் யஹ்யா அவர்கள் பங்கேற்றுக்கொண்டார்.
7. ஷெய்க் அப்துஸ் ஸமது அல்-காதிப்
அஷ்-ஷெய்க் அல்-அல்லாமா அப்துஸ் ஸமது அல்-காதிப் அவர்கள் இந்திய நாட்டின் கேரளாவில் பிறந்து சவூதி நாட்டில் மார்க்கக் கல்வி பயின்றவர் ஆவார்கள். இவர் சவூதியின் ஜீஸானுடைய கல்வியகத்திலும், மதீனா பல்கலைகழகத்திலும் பேராசிரியராக பணியாற்றினார்கள். ஷெய்க் அஹ்மது இப்னு யஹ்யா அந்-நஜ்மி அவர்களின் நெருங்கிய தோழர் ஆவார்கள். மேலும் இன்றைய காலத்தின் முன்னனி அறிஞர்களான ஷெய்க் ஸாலிஹ் அஸ்-ஸுஹைமீ, ஷெய்க் அப்துர் ரஜ்ஜாக் அல்-பத்ர் மற்றும் பலருடைய ஆசிரியர் ஆவார்கள். ஷெய்க் யஹ்யா ஸில்மி அவர்கள் இவர்களிடத்தில் முவத்தா மாலிக்கின் கிதாபுல் வராஸத்தை பயின்றார்கள். மேலும் தாஃவா சம்பந்தமாக கல்வி ரீதியாக கலைந்துரையாடி இருக்கிறார்கள்.
8. ஷெய்க் அப்துல் மன்னான் அந் நூர்பூரி அல்-பாகிஸ்தானி
இவர்களிடம் அறிவிப்பாளர் தொடரோடு ஹதீஸ்களை அறிவிப்பதற்கு ஷெய்க் யஹ்யா அவர்கள் இஜாசா (அனுமதி) பெற்றுள்ளார்.