Skip to content
Part 1 of 4

பக்கம் 1

விமர்சனம் செய்வதும் அதன் நோக்கமும்

விமர்சனம் செய்வதும் அதன் நோக்கமும்

ஷெய்க் யஹ்யா ஸில்மி அஸ் ஸைலானி ஹபிழஹுல்லாஹ்

بــــــــــــــــســـــم الله الرحـــــــمــــن الرحـــــــــيــم

الحمد لله رب العالمين والصلاة والسلام على من لا نبي بعده اما بعد

நம்முடைய ஸலபி அழைப்புப் பணியில் நாம் சிலரை பித்அத்வாதிகள் எனத் தீர்ப்பளித்திருக்கிறோம். அவ்வாறு தீர்ப்பளிக்கப்பட்ட மனிதர்களும், அவர்களுடன் இருக்கின்ற மக்களும் நாம் அவர்களை பித்அத்வாதிகள் எனத் தீர்ப்பளித்ததன் காரணமாக நம்மீது கோபம் கொள்கின்றனர். அவா்கள் நம்முைடைய சபைகளில் அமர்வதையும் வெறுத்து ஸலபி தஃவாவை விட்டும் தங்களை தூரமாக்கிக் கொள்கிறார்கள். 

தங்களை பித்அத்வாதி என்று விமர்சிக்கப்பட்டதற்காக, அவர்கள் இந்த ஸலபி அழைப்புப் பணியை விட்டும் தூரமாகிச் சென்றால் இன்னும் சில காலங்களில் தற்போது இருப்பதை விடவும் பெரிய பித்அத்வாதியாக மாறிவிடுவதற்கு பெரும் வாய்ப்பு உள்ளது. 

இவர்களைப் போன்றவர்களுக்கு இருக்கின்ற கடமை தங்களின் நிலையை மாற்றிக் கொண்டு தங்களைத் திருத்திக் கொள்வதுதான். ஒருவரை குறித்து அவர் பித்அத்வாதி எனக் கூறுவது அவர் அதிலே தொடர்ந்து இருக்க வேண்டும் என்பதற்காக அல்ல. மாறாக, அவரை பகிரங்கமாக பித்அத்வாதி எனக் கூறப்படுவதன் காரணம், அவர் தன்னை அந்த பித்அத்தான வழிமுறையை விட்டும் தூரமாக்கிக் கொண்டு தூய்மையான மனிதராக வாழ வேண்டும் என்பதற்காகவேயாகும்.  அவ்வாறு அவர் தூய்மையாகி விட்டால் அவரின் தூய நிலையையும் பகிரங்கமாக கூறுவது ஸலபி தஃவாவின் வழிமுறையாகும்.