Skip to content
Part 3 of 4

பக்கம் 3

விமர்சனம் செய்வதும் அதன் நோக்கமும்

அல்லாஹ் நமக்கு செய்துள்ள அருளுக்காக நாம் அல்லாஹ்விற்கு நன்றி செலுத்த வேண்டும். இன்னும், அல்லாஹ்வின் திருப்திக்காக வாழ்பவர்களாக நம்மை அமைத்துக் கொள்ள வேண்டும். அல்லாஹ்வே அவனுடைய மார்க்கத்துக்கு வெற்றியைக் கொடுப்பான். 

அல்லாஹ் அல்குர்ஆனில் கூறுகிறான் :                                    

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِن تَنصُرُوا اللَّهَ يَنصُرْكُمْ وَيُثَبِّتْ أَقْدَامَكُمْ

விசுவாசம் கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்விற்கு வெற்றி கொடுத்தால் அவன் உங்களுக்கு வெற்றி தருவான் மேலும் உங்களுடைய பாதங்களை நிலை பெறச் செய்வான். (முஹம்மத் : 7)

ஸலபி அழைப்புப் பணி எந்த அளவிற்கு உறுதியோடு மேற்கொள்ளப்படுமோ அந்த அளவிற்கு வழிகேடுகள் அழிவை அடையும். அனைத்து இயக்கங்களின் தலைவர்களும் ஸலபி அழைப்புப் பணியின் வளர்ச்சியை தடுப்பதற்காகத் தருணம் பார்த்து காத்திருக்கிறார்கள். ஏதேனும் சிறு குறையேனும் அவர்களின் கண்களில் அகப்பட்டால் அதனை வைத்தே ஸலபி அழைப்புப் பணியை அவர்கள் இழிவாக்க முயற்சி செய்வார்கள். 

ஏனைய இயக்கங்களைப் போன்று ஸலபி அழைப்புப் பணியின் அழைப்பாளர்கள் செயற்பட முடியாது. அதாவது, ஸலபி அழைப்புப் பணியை பாதுகாப்பதோ, உலகில் அதனைப் பற்றிச் சிறப்பாகப் பேசுவதோ, அதனைக் கட்டியெழுப்புவதோ ஸலபி அழைப்புப் பணியை சுமந்தவர்கள் மீது கடமையல்ல. மாறாக, அல்லாஹ்வின் மார்க்கத்தை வாழ்வில் நிலைநாட்டுவது மட்டுமே நம் அனைவரின் மீதுள்ள கடமை ஆகும். அதாவது, அல்லாஹ் அவனது மார்க்கத்தை எவ்வாறு நிலைநாட்டப்பட வேண்டுமென நாடுகிறானோ அவ்வாறு அதனை நாம் நிலைநாட்ட வேண்டும்.