பக்கம் 2
விமர்சனம் செய்வதும் அதன் நோக்கமும்
ஒரு மனிதரை விமர்ச்சனம் செய்வது அல்லது அவரை பித்அத்வாதி என்று தீர்ப்புகள் கொடுக்கப்படுவது என்பது அவரின் மீது கொண்ட தனிப்பட்ட குரோதங்களுக்குப் பழிவாங்கும் நோக்கத்தில் அல்ல. மாறாக, அல்லாஹ்விற்காகவும் அவனது மார்க்கத்திற்காகவுமே அது செய்யப்படுகிறது. இவ்வடிப்படையைப் புரியாதவர்கள் தங்களுடைய சுயமரியாதை பாதிக்கப்படுவதாக எண்ணிக் கொண்டு தங்களை விமர்சனம் செய்தவர்களையும், ஸலபி தஃவாவையும் எதிர்க்க முற்படுகிறார்கள்.
விமர்சனங்கள் மூலம் பிரிவினைகள் ஏற்படுகின்றது என்பது நம் முஸ்லிம் மக்களிடம் இருக்கும் தவறான எண்ணமாகும். ஆனால் ஸலபி தஃவாவில் செய்யப்படுகின்ற விமர்சனங்கள் அனைத்தும் நம்முடைய சகோதரர்களின் உள்ளங்களிலுள்ள அசுத்தங்களைக் களைவதற்கு முக்கியமானதொரு வழிகாட்டுதலாகும் என்பதை நாம் உணர வேண்டும்.
மனிதர்களின் செயல்களுக்கு ஷிர்க் என்றும்இ குப்ர் என்றும்இ நிபாக் என்றும் தீர்ப்பளிக்கப்படும் போது தூய உள்ளங்கள் அல்லாஹ்வைப் பயந்து வழிகேட்டை விட்டு தூரமாகின்றன. தவறான வழியில் செல்லும் மனிதர்கள் தங்களின் அறியாமையினாலும்இ ஷைத்தானின் சூழ்ச்சியினாலும் வழிதவறியிருக்கலாம். இத்தகைய நிலையில் இருக்கும் மனிதர்களுக்கு அவர்களின் தவறான வழியை பகிரங்கமாக உபதேசிப்பதன் மூலம் அவர்கள் தங்களின் தவறான பாதையை விட்டு உடனடியாக விலகிக்கொள்வதற்கும், தூரமாகுவதற்கும் வாய்ப்பு கிடைக்கிறது.
அல்லாஹ்வின் அருளால் இன்று இலங்கை மற்றும் இந்திய தமிழ் பேசம் மக்களுக்கு ஸலபி அழைப்புப் பணி சென்றடைந்து கொண்டிருக்கிறது. இது அல்லாஹ்வின் மிகப் பெரிய அருளாகும். அல்லாஹ்வின் அருள் மட்டும் இல்லையென்றால் தமிழ் பேசும் மக்களுக்கு ஸலபி அழைப்புப் பணியின் அடையாளமே இருந்திருக்க வாய்ப்பில்லை.