Skip to content
Part 4 of 4

பக்கம் 4

விமர்சனம் செய்வதும் அதன் நோக்கமும்

இஸ்லாம் பரிபூரணமான ஓர் மார்க்கமாகும். இம்மார்க்கம் குறிப்பிட்ட தொகையினர் மாத்திரம் பின்பற்ற வேண்டிய மார்க்கமல்ல. மாறாக, மனிதர்கள் அனைவரும் இம்மார்க்கத்தைப் பின்பற்றுவதன் பால் வழிகாட்டப்பட வேண்டும். மார்க்கம் நிலைநாட்டப்படும் போது சமூகம் சீர்திருத்தம் அடைகிறது. அவ்வாறு பூமியில் இஸ்லாம் வளரும் போது அதனை எதிர்ப்பதற்கு எந்த சக்தியாலும் முடியாது. 

எனவே, நாம் பூமியில் எங்கு வாழ்ந்தாலும் அல்லாஹ்வின் மார்க்கத்தை நிலைநாட்டும் அடியார்களாக இருப்போம். அவ்வாறு நாம் வாழ்வதற்கு முயற்சி செய்கையில் பூமியில் எந்த இடத்தில் நாம் அல்லாஹ்வின் மார்க்கத்தை நிலைநாட்ட வேண்டுமென்று அல்லாஹு தஆலா நாடுகிறானோ அங்கே அவனது மார்க்கம் வேர் விட்டு வளர்கிறது. 

நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மக்காவில் பிறந்தாலும் அவர்களால் அந்த பூமியில் மார்க்கத்தை நிலைநாட்ட வாய்ப்பு கிடைக்கவில்லை. மாறாக, அவர்கள் மதீனாவுக்கு சென்ற பின்னர்தான் அல்லாஹ்வின் மார்க்கத்தை பகிரங்கமாக நிலைநாட்டினார்கள். அதுவே அல்லாஹ்வின் நாட்டமாக இருந்தது. இவ்வாறு அல்லாஹ், அல்லாஹ்வின் தூதரை அவனுடைய மார்க்கத்தை பின்பற்ற எங்கு நாடினானோ அங்கு அவர்கள் சிறப்பாக செயல்பட்டு, அல்லாஹ்வின் மார்க்கத்தின் பக்கமும் ,அனைத்து நலவின் பக்கமும் மக்களை அழைத்தார்கள். அதே போல் அனைத்து தீமைகளை விட்டும் மக்களை தடுத்தார்கள்.

எனவே தீமையை பிரச்சாரம் செய்யும் மக்களை அடையாளம்  காட்டாமல்  தீமையை தடுக்க முடியாது என்பதையும் இவ்வாறான மக்களை விமர்சனம் செய்வது மார்க்கத்தின் அடிப்படைகளில்  ஒன்று என்பதையும் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். அல்லாஹ் (சுப்ஹானவத்தாஆலா) நம் அனைவரையும் எல்லா விதமான கெடுதுகளில்  இருந்து பாதுகாத்து அவனுடைய மார்க்கத்தை அவன் திருப்தி கொண்ட வழிமுறையில் பின்பற்ற தவ்ஃபீக் செய்வானாக.

அல்லாஹ் மிக அறிந்தவனாக இருக்கின்றான்.