பக்கம் 4
“மஸ்ஜித்தில் தவிர ஜுமுஆ கிடையாது” என்ற அறிவித்தலும், அதன் உண்மையான விளக்கமும்
عَنْ أَبِي هُرَيْرَةَ ؛ أَنَّهُمْ كَتَبُوا إِلَى عُمَرَ يَسْأَلُونَهُ عَنِ الْجُمُعَةِ ؟ فَكَتَبَ :جَمِّعُوا حَيْثُمَا كُنْتُمْ.
அபூஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் ஜுமுஆ தொழுகையைப் பற்றி உமர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களிடம் கேட்டு எழுதி அனுப்பினார்கள். அதற்கு பதிலாக உமர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் எழுதினார்கள் 'நீங்கள் இருந்த இடத்தில் ஜுமுஆ தொழுகையை நிறைவேற்றிக் கொள்ளுங்கள்'. (முஸன்னஃப் இப்னு அபீஷைபா)
மேலுள்ள செய்தியில் 'எந்த இடத்தில் இருக்கின்றீர்களோ' என்பது வீட்டில் இருந்தாலும் சரி, வேறு இடங்களில் இருந்தாலும் சரி, ஜுமுஆவை நிறைவேற்றிக் கொள்ள முடியும் என்பதை நிரூபித்துக் காட்டுகின்றது. இதனடிப்படையில் அபூஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களுடைய வார்த்தையை நபிமொழியை பின்பற்றுவதற்கு தான் விளக்கமாக எடுக்க வேண்டும்.
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் ஜமாஅத்தாக தொழுவது முஸ்லிம்கள் மீது கட்டாயக் கடமை என்று சொன்னதற்கு பிறகு மாறாக அபூஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களுடைய வார்த்தையை வைத்து மஸ்ஜிதுகளில் தவிர ஜுமுஆவை ஜமாஅத்தாகத் தொழ மாட்டோம் என்று சொல்வது முற்றிலும் தவறாகும்.
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கடமையாக்கிய ஜுமுஆவை அபூஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களுடைய வார்த்தையை வைத்து இரத்து செய்வதாகும. இது முற்றிலும் தவறாகும். நபிமொழிக்கு முரணாக ஸஹாபாக்களின் விளக்கத்தை எடுத்து பின்பற்றுவது தவறாகும். அல்லாஹ் நம்மை பாதுகாக்க வேண்டும்.
அல்லாஹ்வே மிக அறிந்தவன்.