Skip to content
Part 2 of 4

பக்கம் 2

“மஸ்ஜித்தில் தவிர ஜுமுஆ கிடையாது” என்ற அறிவித்தலும், அதன் உண்மையான விளக்கமும்

அல்லாஹ்வின் நல்லடியார்களே சஹாபாக்களின் வார்த்தையை நாம் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் நபிமொழிக்கு விளக்கமாகத் தான் எடுக்க வேண்டும். அபூஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களுடைய வார்த்தையை நபிமொழியை பின்பற்றுவதற்கு தான் விளக்கமாக எடுக்க வேண்டுமே தவிர நபிமொழியை மறுப்பதற்கு ஆதாரமாக எடுக்கக்கூடாது.

عَنْ طَارِقِ بْنِ شِهَابٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ الْجُمُعَةُ حَقٌّ وَاجِبٌ عَلَى كُلِّ مُسْلِمٍ فِي جَمَاعَةٍ إِلاَّ أَرْبَعَةً عَبْدٌ مَمْلُوكٌ أَوِ امْرَأَةٌ أَوْ صَبِيٌّ أَوْ مَرِيضٌ ‏"‏ ‏.‏

தாரிக் இப்னு ஷிஹாப் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கின்றார்கள், நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்,

அடிமை, பெண், சிறுவன், நோயாளி ஆகிய நான்கு நபர்களைத் தவிர, அல் ஜுமுஆ என்பது அனைத்து முஸ்லிம் (பெரியவர்)கள் மீதும் ஜமாஅத்தாக தொழுவது கட்டாயக் கடமையாகும். (சுனன் அபிதாவூது)

இதனை ஷெய்க் அல்பானி (ரஹீமஹுல்லாஹ்) இதனை ஆதாரப்பூர்வமானது என்று ஸஹீஹ் சுனன் அபிதாவூதில் பதிந்துள்ளார்கள்.

இந்த நபிமொழி ஜுமுஆவை ஜமாஅத்தாகத் தொழுவது முஸ்லிம் பெரியவர்கள் மீது கட்டாயக் கடமை என்பதை எடுத்துரைக்கின்றது. மஸ்ஜிதுகள் மூடப்படாத நேரத்தில் அதாவது, மஸ்ஜித்கள் செயல்படுகின்ற நேரத்தில் ஜுமுஆவை ஜமாஅத்தாக மஸ்ஜிதுகளில் தொழுவது தான் அனுமதிக்கப்பட்டதாகும். மேலும் இதனைத் தான் அபூஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களுடைய வார்த்தையும் நமக்கு தெளிவுபடுத்திக் காட்டுகின்றது.

மேலும் எந்த இடத்தில் ஜமாஆத்தாக ஜுமுஆ தொழுகை நிலைநாட்டப்பட வேண்டும் என்பது பற்றி நபிமொழிகளில் வரவில்லை. மாற்றாக ஜமாஅத்தாக ஜுமுஆவை தொழுவது கடமை என்பது தான் சொல்லப்பட்டுள்ளது. ஜமாஅத் என்பது இரண்டு நபர்கள் இருப்பதாகும். வீட்டில் இரண்டு நபர்கள் இருந்தால் ஜுமுஆவை ஜமாஅத்தாக தொழுவது கடமையாகும். அல்-குர்ஆன், அஸ்-ஸுன்னாஹ்வை ஸஹாபாக்களின் விளக்கத்தில் சுமப்பவனுக்கு மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஹதீஸ் போதுமானதாகும்.