Skip to content
Part 1 of 4

பக்கம் 1

“மஸ்ஜித்தில் தவிர ஜுமுஆ கிடையாது” என்ற அறிவித்தலும், அதன் உண்மையான விளக்கமும்

“மஸ்ஜித்தில் தவிர ஜுமுஆ கிடையாது”

என்ற அறிவித்தலும், அதன் உண்மையான விளக்கமும்

ஷெய்க் யஹ்யா ஸில்மி அஸ் ஸைலானி ஹபிழஹுல்லாஹ்

بــــــــــــــــســـــم الله الرحـــــــمــــن الرحـــــــــيــم

الحمد لله رب العالمين والصلاة والسلام على من لا نبي بعده اما بعد

முஸன்னஃப் இப்னு அபீஷைபா என்ற நூலில் இடம்பெறக்கூடிய முழுமையான செய்தியை கீழே குறிப்பிட்டுள்ளோம். ஏனென்றால் இந்த செய்தியை ஆதாரமாக காட்டுபவர்கள் இதனை முழுமையாக எடுத்துக்காட்டவில்லை. மேலும் இது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் வார்த்தை அல்ல. மாற்றமாக அபூஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களுடைய வார்த்தையாகும். அவையாவன

َنَّ أَبَا هُرَيْرَةَ أَتَى عَلَى رِجَالٍ جُلُوسٍ فِي الرَّحْبَةِ ، فَقَالَ : اُدْخُلُوا الْمَسْجِدَ ، فَإِنَّهُ لاَ جُمُعَةَ إِلاَّ فِي الْمَسْجِدِ.

அபூஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் "முற்றத்தில் அமர்ந்திருந்த ஆண்களிடம் வந்து, மஸ்ஜிதுக்குள் நுழையுங்கள். ஏனென்றால் மஸ்ஜித்தில் தவிர ஜுமுஆ கிடையாது" என்று கூறினார்கள். (முஸன்னஃப் இப்னு அபி ஷைபா)

முதலாவது அபூஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் ஆண்களை முற்றத்தில் கண்டு அவர்களிடம் மஸ்ஜிதுக்குள் நுழையுங்கள் என்று கூறுகிறார்கள். அவ்வாறு என்றால் மஸ்ஜித்கள் செயல்படுகின்ற நேரத்தை குறிக்கின்றது. மஸ்ஜிதுகள் மூடப்படாத நேரத்தில் 'மஸ்ஜிதுக்குள் நுழையுங்கள்' என்று அபூஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறுகிறார்கள்.

இரண்டாவது மஸ்ஜிதில் தவிர ஜுமுஆ தொழுகை கிடையாது என்று அவர்கள் கூறியது மஸ்ஜித்கள் செயல்படுகின்ற நேரத்தில், மஸ்ஜித்கள் மூடப்படாத நேரத்தில் ஜுமுஆவை மஸ்ஜிதுகளில் தான் நிலைநாட்ட வேண்டும் என்பதை எடுத்துக் காட்டுகிறார்கள்.

இந்த செய்தியை எடுத்துக்காட்டி, இன்றைக்கு மஸ்ஜிதுகள் செயல்படாத நேரத்தில், மூடப்பட்டுள்ள நேரத்தில் ‘மஸ்ஜிதில் தவிர ஜுமுஆ தொழுகை கிடையாது’ என்பதை நடைமுறைப்படுத்துவது தவறாகும். மேலும் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுடைய ஆதாரப்பூர்வமான நபிமொழிக்கு முரணாக ஒரு சஹாபியின் வார்த்தையை சுமப்பது தவறு ஆகும்.