பக்கம் 3
“மஸ்ஜித்தில் தவிர ஜுமுஆ கிடையாது” என்ற அறிவித்தலும், அதன் உண்மையான விளக்கமும்
والحق أن هذه الجمعة فريضة من فرائض الله سبحانه وشعار من شعائر الإسلام وصلاة من الصلوات فمن زعم أنه يعتبر فيها ما لا يعتبر في غيرها من الصلوات لم يسمع منه ذلك إلا بدليل فإذا لم يكن في المكان إلا رجلان قام أحدهما يخطب واستمع له الآخر ثم قاما فصليا فقد صليا صلاة الجمعة . والحاصل أن جميع الأمكنة صالحة لتأدية هذه الفريضة
ஷெய்க் அல்பானி (ரஹீமஹுல்லாஹ்) அவர்கள் கூறுகிறார்கள்,
அல்லாஹ் கடமையாக்கியதில் ஒன்றுதான் ஜுமுஆ ஆகும். அது தான் சத்தியமாகும். இது இஸ்லாத்தின் ஒரு அடையாளமாகும். மற்ற தொழுகைகளைப் போன்று இதுவும் ஒரு தொழுகையாகும். மற்ற தொழுகைகளில் இல்லாத ஒரு புதிய நிபந்தனை, இந்த தொழுகைக்கு உள்ளது என்று யாரும் சொல்வார்கள் என்றால் அதனை நாம் ஆதாரமில்லாமல் செவியேற்க மாட்டோம். ஏதேனும் ஒரு இடத்தில் இரண்டு நபர்கள் தான் உள்ளனர் அப்போது ஒருவர் குத்பா செய்து மற்றொருவர் அதை செவியேற்று அதற்குப் பிறகு ஜுமுஆ தொழுகையை தொழுது விட்டால் இரண்டு நபர்களும் ஜுமுஆவை நிறைவேற்றி விட்டார்கள். இந்த தொழுகையை(ஜுமுஆவை) எல்லா இடங்களிலும் கடமையாக தொழுவதற்கு வாய்ப்பு உள்ளதாகும். (நூல்: அல்-அஜூபதுன் நாஃபிஆ).
ஆனால் இன்றைக்கு மஸ்ஜிதுகள் செயல்படவில்லை, மஸ்ஜிதுகள் மூடப்பட்டுள்ளன. இந்த சூழ்நிலைக்கு அபூஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு) அவருடைய வார்த்தை எடுத்துக் காட்டுவது ஆதாரமாக அமையாது.
ஏனென்றால் தற்போது மஸ்ஜிதுகளில் ஜுமுஆ தொழுகை மட்டும் தொழுவதற்கு தடுக்கப்படவில்லை. ஐவேளைத் தொழுகையையும் தான் தொழுவதற்கு தடுக்கப்பட்டுள்ளன. ஐவேளைத் தொழுகையை வீட்டில் தொழுவது எவ்வாறு அனுமதியோ அதேபோன்று தான் ஜுமுஆவை ஜமாஅத்தாக வீட்டில் தொழுவதற்கும் அனுமதியாகும்.
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْأَرْضُ كُلُّهَا مَسْجِدٌ إِلَّا الْمَقْبَرَةَ وَالْحَمَّامَ
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்,
அடக்கஸ்தலங்கள் மற்றும் கழிப்பறைகள் தவிர, பூமி முழுவதும் தொழுகையை நிறைவேற்றும் இடங்களாக (மஸ்ஜிதுகளாக) மாற்றப்பட்டுள்ளது. (சுனன் அபிதாவூது)
இதனை ஷெய்க் அல்பானி (ரஹீமஹுல்லாஹ்) அவர்கள் ஆதாரப்பூர்வமானது என்று ஸஹீஹ் சுனன் அபிதாவூதில் பதிவு செய்துள்ளார்கள்.