பக்கம் -1.
மார்க்கத்தை பின்பற்றும் முஸ்லிம்களுக்கு 10 உபதேசங்கள்
மார்க்கத்தைப் பின்பற்ற வந்த முஸ்லிம்களுக்கு 10 உபதேசங்கள்
ஷெய்க் யஹ்யா சில்மி அஸ்ஸைலானி ஹபிழஹுல்லாஹ்
بــــــــــــــــســـــم الله الرحـــــــمــــن الرحـــــــــيــم
الحمد لله رب العالمين والصلاة والسلام على من لا نبي بعده اما بعد
1. நுஸுஸ்களைப் பின்பற்றுவது அனைத்து முஸ்லிம்களின் மீது கடமையாகும். அதில்தான் அல்லாஹ்வையும், அவனது தூதரையும் பின்பற்றுவதற்கான வழிகாட்டுதல் இருக்கிறது. (நுஸுஸ் என்பது அல்குர்ஆனின் ஆயத்துகளும், நபிமொழிகளுமாகும்)
2. அல்குர்ஆனையும், சுன்னாவையும் ஸிராதுல் முஸ்தகீமின் பாதையில் செயற்படுத்துவதற்கு முயற்சி செய்பவர்கள், அதனை நபியும், ஸஹாபாக்களும் இருந்த வழிமுறையில் விளங்கி செயல்படுவது அவர்கள் மீது கடமையாகும்.
3. சுயகருத்துகளை நுழைப்பது ஒருவரை குர்ஆனையும், சுன்னாவையும் பின்பற்றுவதை விட்டும் தூரமாக்கி நாசமாக்கி விடும்.
4. கருத்துகளில் தரமானதும் உள்ளன. குறையுள்ளவையும் உள்ளன. எக்கருத்துகள் அல்குர்ஆனுக்கும், ஸுன்னாஹ்வுக்கும் சார்பானதாக இருக்கிறதோ அவற்றைத் தவிரவுள்ள கருத்துகளை பின்பற்றுவது அவசியமல்ல.
5.கருத்துகளை விட்டுவிடுவதால் முஸ்லிம்களுக்கு பாவம் கிடையாது