பக்கம் 4
சத்தியம் ஸஹாபாக்களின் விளக்கத்தின் உள்ளே அடங்கியுள்ளது
ஏனென்றால் அவர்களைவிட மார்க்கத்தை தெளிவாக விளங்கிய கூட்டம் யாருமே கிடையாது. ஆயத்துக்களின் வரையரைகளையும் அதன் ஆழமான கருத்துக்களையும் அவர்களைவிடவும் விளங்கியவர்கள் எவருமில்லை. அந்தளவிற்கு விளங்கிய அவர்கள் ஒற்றுமையாக வாழ்ந்ததன் காரணம் அவர்கள் அதற்கான வரையரைகளை சரிவரப் புரிந்து பேணிவந்தமையே ஆகும்.
அதனுடைய விளக்கங்களை சரியாக விளங்கிய காரணத்தினால் அவர்களுடைய கொள்கை ஒன்றாக இருந்தது. அவர்களுடைய வணக்கவழிபாடுகள் ஒன்றாக இருந்தது. அனைத்து அம்சங்களும் ஒன்றாகவே இருந்தன. அனைத்து விஷயங்களும் ஒரு அடிப்படையில் அமைந்த காரணத்தினால் அந்த மக்கள் வேறுபடவில்லை.
இமாம் அல் அவ்ஸாயி رحمه الله ( இறப்பு 157ஹிஜ்ரி):
முன்னோர்களின் அறிவித்தல்களை பற்றிக்கொள், மக்கள் உன்னை புறக்கனித்தாலும் சரியே !, மக்களின் அபிப்பிராயங்களில் கவனமாக இரு, அது அவர்களின் வார்த்தைகளால் எவ்வளவு அழகாக இருந்தாலும் சரியே. (கிதாபுல் ஷரியா இமாம் ஆஜூரி )