Skip to content
Part 1 of 4

பக்கம் 1

சத்தியம் ஸஹாபாக்களின் விளக்கத்தின் உள்ளே அடங்கியுள்ளது

சத்தியம் ஸஹாபாக்களின் விளக்கத்தின் உள்ளே அடங்கியுள்ளது


ஷெய்க் யஹ்யா ஸில்மி அஸ் ஸைலானி ஹபிழஹுல்லாஹ்

بــــــــــــــــســـــم الله الرحـــــــمــــن الرحـــــــــيــم

الحمد لله رب العالمين والصلاة والسلام على من لا نبي بعده اما بعد

 

குர்ஆன் சுன்னாஹ்வை ஸஹாபாக்கள் விளங்கிய அடிப்படையில் விளங்க கூடிய அந்த கூட்டம் ஏனையவர்களின் வார்த்தைகள், வழிகாட்டல்களை விடவும் ஸஹாபாக்கள், தாபியீன்களின் வார்த்தைகளுக்கும்  வழிகாட்டல்களுக்கும் முக்கியத்துவம் அளிப்பார்கள். அது கொள்கை, வணக்கவழிபாடு, அன்றாட நடவடிக்கை, குனாதிசயம், அர‌சிய‌ல் மற்றும் சமூக விடயங்கள் போன்ற எந்த அம்சமாக இருப்பினும் சரியே!.


மார்க்கத்தில் அடிப்படையான விஷயங்களிலும் ஏனைய விஷயங்களிலும் அல்லாஹ் அவனது தூதருக்கு அனுப்பிய வஹியின் அடிப்படையில் உறுதியாக இருப்பார்கள். 


இவர்கள் தூய்மையாகவும் உண்மையாகவும் உறுதியாகவும் தஃவா பாதையில் நிமிர்ந்து நிற்பார்கள். மேலும் இவர்கள் தான் நபித்துவத்தின் கல்வியை சுமப்பவர்கள்.

இதனை – நான் (பஸீரா) எனும் தெளிவோடு  சுமப்பேன்.  அது போன்று என்னைப் பின்பற்றுபவர்களும் அவ்வாறுதான் இருப்பார்கள்.  அதாவது அல்லாஹ்வின் பால் அழைக்கும் அழைப்புப் பணியானது தெளிவோடு இருக்கும்.  


அந்தத் தெளிவு என்பது என்னவென்றால் அவை அல்குர்ஆனின் ஆதாரங்களோடும் அஸ்ஸுன்னாவின் ஆதாரங்களோடும் அத்தெளிவு இருக்கும்.  அத்தெளிவை அந்த நபி பெற்றவராக இருப்பதுடன் அந்த நபியை அழைப்புப் பணியில் பின்பற்றுபவர்களும் தெளிவோடு இருப்பார்கள்.  


அழைப்புப் பணியில் தெளிவுடன் இருப்பதன் அவசியத்தை அறிந்ததனால்தான் யாரும் ஒருவர் எந்தளவுக்குப் படித்தவராக இருந்தாலும் அவருக்கு அழைப்புப் பணி செய்யும் விஷயத்தில்  உலமாக்கள் அவருக்கு அனுமதி கொடுக்காத வரை  அயிம்மத்துஸ் ஸுன்னா (ஸுன்னாவுடைய இமாம்கள், உலமாக்கள் ) அவர்களை அழைப்புபணியை சுமப்பதற்கு தகுதியானவராக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.  


ஏனென்றால்  அழைப்புப் பணியைச் சுமப்பவர் தெளிவைப் பெற்றவராக இருக்க வேண்டும்.  அது எத்தகைய தெளிவு என்றால் எத்திவைப்பதற்கு முன்  கற்றுக்கொண்டதை தெளிவாக அறிந்தவராகவும், முழுமையாக விளங்கியவராகவும் இருக்க வேண்டும்.


இன்று பலர் குர்ஆனைப் படிக்கின்றார்கள்  ஆயத்தின் விளக்கங்களை வாசிக்கின்றார்கள்  வாசித்த பின் அதனை விளங்க முடியாத நிலைவருகின்ற போது அதனை தங்களுக்குள்  மறைத்துக்கொண்டு தங்களது தேவைகேற்ப விளக்கமளிக்கின்றார்கள்.  இவ்வாறு விளக்கம் கொடுப்பது பஸீரா  அல்ல.  


மாறாக அந்த ஆயத்துடைய விளக்கங்களில்  எந்தெந்த ஆயத்துக்களுக்கு என்னென்ன வரைவிலக்கனங்கள் இருக்கின்றன அதன் வரையரைகள் என்ன, அதற்கான ஸஹாபாக்களின் விளக்கங்கள் என்ன இன்னும் அதன் சட்டங்கள்  என்ன என்று அனைத்தையும்  அவர்கள் புரிந்தவர்களாக இருக்க வேண்டும்.