Skip to content
Part 2 of 4

பக்கம் 2

சத்தியம் ஸஹாபாக்களின் விளக்கத்தின் உள்ளே அடங்கியுள்ளது

அதே போன்று இதற்கு முரணான விஷயங்களில் எப்படி குர்ஆன் ஸுன்னாவின் அடிப்படையைக் கையாள வேண்டும் எனத்தெரிந்தவர்களாக இருக்க வேண்டும்.    


மேலும் எந்த ஆயத் எந்த ஆயத்துடன் சம்பந்தமானது என்பதை விளங்குவதுடன் ஒரு விஷயத்திற்கு எந்த ஆயத் தொடர்புடையுது எந்த ஆயத் அதனுடன் தொடர்பற்றது என்பதைப் புரிந்தவர்களாக இருக்க வேண்டும்.  அதேபோன்று  எந்த ஹதீஸ்கள் எந்த ஹதீஸுடன் தொடர்புடையது இன்னும் எது தொடர்பற்றது என்பவற்றையெல்லாம் அறிந்தவர்களாக இருக்க வேண்டும்.  


இவையனைத்தையும் எதன் மூலம் பெற்றுக்கொள்ள முடியும்?  எமக்குத் தேவையான மாதிரி ஓதுவதாலும், வாசிப்பதனாலும், பெற்றுக்கொள்ள முடியுமா?  ஒரு போதும் முடியாது.  இவர்களுக்கு யார் இதனைக் கற்றுக்கொடுப்பது?  ஆயத்துக்களின் வரையரைகள் என்னவென்றும், ஒரு ஆயத்தினை இன்னுமொரு ஆயத்துடன் எவ்வாறு சேர்த்து, பிரித்து விளங்குவதென்றும் மேலும் ஒரு ஹதீஸுடன் எந்த ஆயத்தினை அல்லது எந்த ஹதீஸினை சேர்த்து விளங்குவது என்பதையும் நபி அவர்கள் ஸஹாபாக்களுக்குக் காட்டிக் கொடுத்த வழிமுறை எவையென்பதையும் நாம் அறிந்துகொள்ளவில்லை என்றால் ஒவ்வொருவரும் அவர்களது தேவைகேற்ப  ஹதீஸ்களை ஹதீஸ்களுடனும் ஆயத்துக்களுடனும் தொடர்புபடுத்தி தங்களுக்குத் தேவையான விளக்கங்களைப் பெற்றுக்கொள்வார்கள்.  


இந்த வழிமுறையில் வந்த கூட்டங்கள்தான் குர்ஆன் ஸுன்னாவின் பெயரில் அவரவரது தேவைக்கேற்ப வழிமுறைகளை உருவாக்கிக் கொண்டார்கள்.  இதனால்தான் இயக்கங்கள் வளர்ந்தன. இதனால்தான் மத்ஹபுகள், பிரிவுகள் வேறுபாடுகள் சர்ச்சைகள் போன்ற அனைத்தும் தூய இஸ்லாமிய மார்க்கத்தில் ஏற்பட்டு இருக்கின்றன.