பக்கம் 4
சத்தியவாதியை அடையாளம் காணுவதும் சத்தியம் அடையாளம் காணுவதும்
கல்வி கற்று முடிந்த பின்னர், தான் ஒரு அறிஞர் என்ற நிலையில் சத்தியம் எவ்வளவு பலமானது, ஆதாராமானது என்பதை அறிந்து கொள்வார்.
இவ்வாறு இல்லையெனில் இதற்கு முன், ஒரு மனிதர் என்ன ஆதாரத்தினைக் கொண்டு மார்க்கத்தில் ஒன்றை சரி அல்லது பிழை என காண்பார் ?. அவருடைய புத்திக்கு எட்டாதவையும் , தெரியாத கல்வியையும் கொண்டா ? இல்லை!.
எனவே தான் பின்பற்றுவதற்கு ஓர் கூட்டம் / முன்மாதிரி அவசியமாகின்றது. கல்வி கற்க தொடங்கும் மாணவருக்கு தொடங்குவதற்கு ஓர் வழிமுறை வேண்டும். அவருடைய நம்பிக்கைக்கு ஓர் அடிப்படை அவசியமாகின்றது. அவருடைய செயற்பாடுகளுக்கு ஓர் முன்மாதிரி அவசியமாகின்றது.
இவைகளுக்கு யாரை முன்மாதிரியாகக் கொள்வது ? ஒவ்வொருவரும் தனக்கு புரிந்தவற்றை பின்பற்றினால் அல்லது தான் வாசித்து தனக்கு விளங்குவதைப் பின்பற்றினால், ஒவ்வொருவரும் தனக்கென்று ஒரு வழியை உருவாக்கிக் கொள்வார் தவிர வேறில்லை. இவ்வாறு இருக்கையில் எவ்வாறு முஸ்லிம் உம்மத் ஒற்றுமையாகி அனைவரும் சத்தியவாதி ஆக முடியும் ? .
மாறாக, சத்தியவாதிகள் என்று ஒரு கூட்டத்தினை அடையாளம் கண்டு பின்னர், அந்த கூட்டம் அருமை சஹாபாக்கள் தான் என்று அறிந்து , அவர்களின் வாழ்க்கையினை முன்மாதிரியாகக் கொண்டு அவ்வழியினை பின்பற்றி , நபி (ﷺ) அவர்களுடைய உபதேசங்களை எவ்வாறு ஸஹாபாக்கள் நடைமுறைப்படுத்தினார்களோ, அவ்வாறே பின்பற்றி, அவை தனக்கு அறிந்தவைகளோ அல்லது அறியாதவைகளோ ஆக இருந்தாலும் அவைகளை அருமை சஹாபாக்கள் போன்றே நடைமுறைப்படுத்தி பின்பற்ற வேண்டும் என்ற ஓர் அளவுகோளை கையாண்டால் ,
அப்போதுதான் நிச்சயமாக அவரிந்தவரும் அறியாதவரும் சத்தியத்தில் இருப்பார் . கல்வியை கற்க தொடங்குவரும் , உலமாக்களும் சத்தியத்தில் இருப்பார்கள்.
எனவேதான் “கல்வியென்பது சுமக்கப்படும் ஓர் விடையமாகும்” தான் கூறப்படுகிறது. சுமப்பது என்றால், ஓர் இடத்தில் காணப்படும் ஒன்றை இன்னோர் இடத்திற்கு இடமாற்றம் செய்வதாகும்.
“ யஹ்மிலு ஹாதல் இல்ம் ” என்றே ரசூல் (ﷺ) அவர்கள் கூறியுள்ளார்கள். {ஆதாரம் : கிதாபுல் ஷரியா , ஷரஹ் அஸ்ஹாபுல் ஹதீஸ் }
கல்வியினை சுமப்பவர்கள் என்றால் அவர்கள் உருவாக்குபவர்கள் அல்லர், தன்னுடைய காலத்தில் அனைவருக்கும் எத்திவைத்து மேலும் பின்னால் வரும் காலங்களுக்கும் அதனை தொடர்ந்து முன்கொண்டு செல்வதற்கு ஒத்துழைப்பாக இருப்பவர்கள்.
இதுவே நேர்வழியில் உள்ள உலமாக்களின் பண்பாகும். அல்குர்ஆனை சுமப்பது என்றால் அல்குர்ஆன் எந்த விளக்கத்தோடு இறங்கியதோ அதனை அப்படியே விளங்கி பெற்றுக் கொள்வது ஆகும் .
அல்குர்ஆனை விளங்கி மனனமிட்டு பின்னால் வரும் சமூகத்திற்கும் அதனை எத்திவைப்பார்கள். அவ்வாறே ஹதீஸினையும் மனனமிட்டு சுமந்து பின்னால் வரும் சமூகத்திற்கும் எத்திவைப்பார்கள். இதுவே சுமந்து கொண்டு செல்வதன் வழிமுறையாகும். இதுவே, சத்தியத்தை உறுதியாக அறிந்து பின்பற்றும் வழிமுறையாகும்.