Skip to content
Part 2 of 4

பக்கம் 2

சத்தியவாதியை அடையாளம் காணுவதும் சத்தியம் அடையாளம் காணுவதும்

தனக்கு முன்சென்ற சத்தியவாதிகளை அடையாளம் கண்டால்  சத்தியவாதியின் பாதையினை அறிந்து கொள்ள  முடியும். எனவே, முதலில்  சத்தியத்தை சுமந்த சத்தியவாதியை அடையாளம் காண  வேண்டும். இதற்காகவே 


“ اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ ” 


 “நேர்வழியினை எனக்கு காட்டித்தருவாயாக” ( அல்குர்ஆன் 1:5 )

என்ற துஆவை  அல்லாஹ் நமக்கு கற்றுத் தந்திருக்கின்றான். எவ்வாறென்றால் 


“ صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ ” – 


“எவர்களுக்கு நேரான பாதை அருளாகக் கொடுக்கப்பட்டதோ அப்பாதையை எனக்கு காட்டுவாயாக”( அல்குர்ஆன் 1:6 )

என்று “ சத்தியவாதியையே ” அல்லாஹ் குறிப்பிட்டுக் காட்டுகின்றான். 

எனவே, சத்தியவாதியினை அடையாளம் காணாமல்  சத்தியத்தினை அடையாளம் காண முடியாது மேலும் அதனை  அடையவும் முடியாது. 

இதனையே ரசூல் (ﷺ) அவர்கள் எனது உம்மத் 73 கூட்டமாக  பிரியும் அதில் 72 கூட்டமும்  வழிகேடு ஒன்று மட்டும் சுவர்க்கம் செல்லும் என்று சுவர்க்கம் நுழையும் நேரான பாதை என்பதை , அந்தப் பாதையில் உள்ளவர்களை அடையாளம் காட்டியே அப்பாதையினை அடையாளம் காட்டினார்கள் . 


“ ما أنا عليه وأصحابي”  


“எந்தப்பாதையில்  நானும் எனது தோழர்களும் இருக்கின்றோமோ, என்று அந்தப்பாதையில் எவர் இருப்பாரோ அவரே சத்தியவாதியாவார்”.


என்றார்கள். இதில்  சத்தியவாதியியை கொண்டே சத்தியபாதை அடையாளம் காட்டி , சத்தியத்தினையும் அசத்தியத்தினையும் இனம்  காண்பதற்கு முன்னர் சத்தியவாதி யார் என்பதை  குறிப்பிடுகின்றார்கள். 


அல்லாஹ் (سبحان و تعالىٰ) “சூரத்துல் அன்ஆம் 6 :153 .” ல் கூறியுள்ளான்: 


“ وَأَنَّ هَٰذَا صِرَاطِي مُسْتَقِيمًا فَاتَّبِعُوهُ ۖ وَلَا تَتَّبِعُوا السُّبُلَ ”– 


“இது என்னுடைய நேரான பாதையாகும். இப்பாதையினைப் பின்பற்று, ஏனைய பாதைகளைப் பின்பற்ற வேண்டாம்”. 


“இங்கும் என்னுடைய நேரான பாதை” என்று சத்தியவாதியான நபியைக் கொண்டே இனம் காட்டப்பட்டுள்ளது . எனவே, சத்தியவாதிகளைப் அறிந்தாலே  சத்தியத்தின் பாதையினை அறிந்து  கொள்ள முடியும். 


சத்தியவாதி என்று எவருமே இல்லை. என்றாலும், நான் சத்தியத்தினை புரிந்து கொள்வேன் என்று தம்பட்டம் அடிப்பவர் , சத்தியத்தை அடைய மாட்டார். அது ஷைய்த்தானின் ஓர் தந்திரமே ஆகும். 


ஏனென்றால்,. “ இவர் சத்தியவாதி ” என்று குறிப்பிட்டு அடையாளம் காட்டினால் , அவர்  செல்லும் பாதை சத்தியமாகி, உண்மையான சத்தியமான பாதை அசத்தியமான பாதையாகவும் ஆகிவிடும். இவ்வாறு சத்தியபாதையில்  செல்லாமல் தடுப்பதே ஷெய்த்தானின் முதன்மையான குறிக்கோளாகும். அப்போதுதான்  தனது தேவைக்கேற்ப அசத்தியத்தை  சத்தியமாக மக்களிடத்தில்  உருவாக்க முடியும்.