Skip to content
Part 1 of 4

பக்கம் 1

சத்தியவாதியை அடையாளம் காணுவதும் சத்தியம் அடையாளம் காணுவதும்

சத்தியவாதியை அடையாளம் காணுவதும் சத்தியம் அடையாளம் காணுவதும் 

 

ஷெய்க் யஹ்யா ஸில்மி அஸ் ஸைலானி ஹபிழஹுல்லாஹ்

بــــــــــــــــســـــم الله الرحـــــــمــــن الرحـــــــــيــم

الحمد لله رب العالمين والصلاة والسلام على من لا نبي بعده اما بعد

பல நூற்றாண்டு காலங்களுக்கும் வரலாறுகளுக்கும் பின் பிறந்திருக்கும்  மக்கள் , எப்படி சத்தியத்தை விளங்கி பின்பற்றுவது என்பதை அறியாமல் , அசத்தியங்களையும், வழிகேடுகளையும், கெட்ட விஷயங்களையும்  சத்தியம் என்று கருதி, நினைத்து பின்பற்றிக் கொண்டிருக்கிறார்கள். 


இன்னும், தான் சத்தியம் என்று கருதியதன் பக்கம் மற்றவர்களையும்  அழைத்துக் கொண்டும் இருக்கிறார்கள். மேலும்  தான் இருப்பது சத்திய பாதை என்பதை நிரூபிக்க  , ஏனைய கொள்கை கோட்பாடுகளை தனது புத்தியினால், தர்க்கத்தினால், குதர்க்கங்களினால் , விவாதங்களினால் சவால் விட்டு , இன்னும் பேச்சுத் திறனால் , தனது புத்தியால் பிழை என நிரூபிக்க முயலுகின்றனர். 


இவ்வாறு மனித சமுதாயம் , தனிப்பாதைகளை தானாகவே அமைத்து சத்தியத்தை தேடவும், நிரூபிக்கவும் முற்பட்டு விட்டனர். இதே வழிமுறையை முஸ்லிம் சமுதாயமும் , அல்குர் ஆனையும் , சுன்னாவையும் கையில் வைத்துக் கொண்டு பிரயோகித்து தடுமாறுகிறார்கள். 


இந்த வழிமுறையில் சிக்கி  இஸ்லாமிய மார்க்கத்தை பல பிரிவுகளாக  பிரித்து கூறு போட்டு விட்டார்கள் . தனது புத்தியால், தர்க்கத்தால், விவாதத்தால், தான் சரியென்று கருதி பெற்றுக் கொண்டதை, அல்குர் ஆன், சுன்னாவின் கொள்கையென்று கூறி , அதுதான் சத்தியமான பாதை, நேரானா பதை என்று எண்ணி சந்தோஷமும் கொள்கின்றனர். இது உண்மையில் , இந்த உம்மத்தின் ஒரு பரிதாபமான நிலையாகும். 


ஏனெனில், அல்லாஹ் (سبحان و تعالىٰ), நேரான பாதையை, சத்தியமான மார்க்கத்தை  இறக்கி, அதனை அடையாளம் காட்டாமல் , அதனை அடையாளம் காணும்  முறையை சொல்லி தராமல் விட்டு விடவில்லை. 


மாறாக  , அதற்கு இஸ்லாம் மிக இலகுவான வழிமுறையை கற்று தந்தது மட்டுமின்றி அந்த வழிமுறையை எடுத்து நடக்கும் படி கட்டளை இடுகின்றது, இன்னும் பிரார்த்திக்கவும் சொல்லுகின்றது. 


பல வரலாற்றிற்கு பின்னர் பிறந்திருக்கும் நாம் , நமக்கு  முன் சத்தியவாதிகள் வாழ்ந்தார்களா  ? , அல்லது நாம்தான்  சத்தியத்தினை அடையாளம் கண்ட  முதலாவது மனிதனா ? என்று தேடிப்பார்க்க வேண்டும்.