Skip to content
Part 3 of 4

பக்கம் 3

சத்தியவாதியை அடையாளம் காணுவதும் சத்தியம் அடையாளம் காணுவதும்

இதனாலேயே, சத்தியத்தை அடையாளம்  காட்ட அல்குர்ஆனிலும் ஹதீஸிலும்  சத்தியவாதியினை முதன்மையாக அடையாளம் காட்டப்பட்டுள்ளது . 


“ لَّقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّهِ أُسْوَةٌ حَسَنَةٌ  ” 


“எவர்  அல்லாஹ்வையும் மறுமையையும்  நாடுகின்றாரோ  அவருக்கு , நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடத்தில் அழகான ஓர் முன்மாதிரி உள்ளது”. (அல்குர்ஆன் 33:21)


நாம் முன்மாதிரியாக எடுப்பதற்கு  சிறப்பான ஓர் நபியினை அல்லாஹ் அனுப்பியுள்ளான். மேலும் இந்த ஆயத்தில்  அந்நபியை  சத்தியவாதி என்று நிரூபித்து , அந்நபியின் வழி செல், அப்போதே நீ சத்தியத்தினை அடைந்து கொள்வாய் என்று அல்லாஹ்  வழிகாட்டியுள்ளானே தவிர, சத்தியத்தை மட்டும் இறக்கி அதனை நீ பெற்றுக் கொள் , நீ விருப்பியவாறு பின்பற்று என்று கூறவில்லை. 


அல்குர்ஆனை இறக்கி அதற்கு விளக்கம் அளிப்பதற்கு ஓர் நபியினையும் அனுப்பியுள்ளான். அந்நபியின் செயற்பாடுகளை முன்மாதிரியாக அமைத்து, அவரோடு ஒரு சமூகத்தினையும் உருவாக்கியுள்ளான். அந்த  சமூகம் நேரான பாதையை கொண்ட சத்தியமான சமூகம்.  மேலும் அதனையே  பின் தொடர்ந்து செல் என்றும் அடையாளம் காட்டியுள்ளான் . 


எனவே, சத்தியபாதையினை அடையாளம் காண்பது ,  அடையாளம் காண்பது மூலமே  சாத்தியமாகும். சத்தியவாதியை ஏற்றுக் கொண்டால், அவர்களுடைய  கொள்கையினையும் வழிமுறையினையும் மேலும் அவர்களுடைய  பாதையினையும் ஏற்றுக் கொள்வது இலகுவானதாகும். 


ஒரு மனிதர்  தனது கல்வியினை தொடங்கும் போது, எல்லா முடிவுகளையும் கண்ட பின்னர் சத்தியத்தை  பெற்றுக் கொள்ள முயல்கிறார்  என்றால், கல்விகற்று முடியும் வரையிலும், வேறுபாடுகளுக்கெல்லாம் அறிந்து அதில்  தீர்வு காணும் வரையிலும் குழப்பதில்தான் இருப்பார் . 


அதுவரையிலும் அவரது  ஹயாத் மற்றும் மவ்த்தின்  நிலைப்பாடு என்ன? அவருடைய செயல்களின்  நிலைப்பாடு என்ன? அவர் சம்பந்தமான  நடவடிக்கைகள் என்ன? சத்தியத்தில் இருந்தாரா ? அல்லது அசத்தியத்தில் இருந்தாரா ? என , அவருடைய  நிலைப்பாடுகள் அனைத்தும்  பல கேள்விக் குறிகளாகவே இருக்கும் . 


ஆனால், அவர்  சத்தியவாதியுடன் இருந்தாரென்றால்  அவர் ஆரம்பம் முதல் சத்தியத்தை பின்பற்றும் தன்மையினைக் கொண்டிருப்பார். 


நம்பிக்கையுடன் நபி (ﷺ) அவர்களிடம் நேரடியாக கேட்டு, கற்று, விளங்கி ஸஹாபாக்கள் நடைமுறைப்படுத்தியவைகளை தானும் நடைமுறைப்படுத்தி, அவர்களுடைய கொள்கைகளைப் பெற்றுக் கொண்டு, அப்பாதையில் தானும் வாழ்வேன் என்று ஒரு மாணவர்  தனது கல்வியினை ஆரம்பிக்கும் போதே உறுதி கொண்டிருப்பார். சத்தியமான கொள்கையில் வளர்ந்து  சத்திய உள்ளங்களைப் புரிந்து சத்தியவாதிகளுடன் சேர்ந்து கொள்வார்.