பக்கம் 1
அல்குர்ஆனில் சொல்லப்படும் அல்-முஃமினீன் பாதை என்பது சஹாபாக்களின் பாதை என்பதன் ஆதாரங்கள்
அல்குர்ஆனில் சொல்லப்படும் அல்-முஃமினீன் பாதை என்பது சஹாபாக்களின் பாதை என்பதன் ஆதாரங்கள்
ஷெய்க் யஹ்யா ஸில்மி அஸ் ஸைலானி ஹபிழஹுல்லாஹ்
بــــــــــــــــســـــم الله الرحـــــــمــــن الرحـــــــــيــم
الحمد لله رب العالمين والصلاة والسلام على من لا نبي بعده اما بعد
அன்றைய தினம் இறக்கிய மார்க்கத்தை நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களும், அவர்களுடைய ஸஹாபாக்களும் எவ்வாறு பின்பற்றினார்களோ, அவ்வழிமுறையில் எவர்கள் பின்பற்றுகின்றார்களோ அவர்கள் “ஜன்னத்” சென்றடைவார்கள். அந்த வழிமுறையினைத் தவிர்ந்து அல்குர்ஆன், அஸ்ஸுன்னா என்று கூறி ஆதாரங்களை நிருபிக்கிறோம் என்று அல்குர்ஆன், அஸ்ஸுன்னாவில் காட்டினாலும் அவர்கள் “ஜன்னத்” சென்றடைய மாட்டார்கள் என்பது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுடைய தீர்ப்பாகும்.
இதனையே நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் தனக்கு முன்னால் ஒரு நேர்கோட்டினை வரைந்தார்கள். அதன் வலதிலும், இடதிலும் பல கோடுகளை வரைந்தார்கள். தனக்கு முன்னால் வரைந்த நேர்கோட்டில் தனது விரலை வைத்து, சூரத்துல் “அன்ஆம்” இன் 153 வசனத்தை ஓதிக் காட்டினார்.
وَأَنَّ هَٰذَا صِرَاطِي مُسْتَقِيمًا فَاتَّبِعُوهُ ۖ وَلَا تَتَّبِعُوا السُّبُلَ
”நிச்சயமாக இது நேரானதாக இருக்க என்னுடைய வழியாகும். இதனையே நீங்கள் பின்பற்றங்கள். இன்னும், மற்ற வழிகளைப் பினபற்றாதீர்கள். அவை, அவனுடைய வழியில் இருந்து உங்களைப் பிரித்து விடும் என்ற அல்குர்ஆன் வசனத்தைக் கூறி ஏனைய அனைத்துப் பாதைகளிலும் ஓர் ஷைத்தான் அழைப்பாளராக இருக்கின்றான் என்று எச்சரித்துள்ளார்கள். (முஸ்னத் அஹ்மத்);
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுடைய நேர் பாதையில் ஷைத்தான் அழைப்பாளராக இல்லை. ஆனால் ஏனைய பாதைகளில் ஷைத்தான் அழைப்பாளராக இருந்து மனிதன் நேர்வழியில் செல்வதைத் தடுத்து “ஜன்னத்” சென்றவடைவதைத் தடுக்கின்றான். இதுவே அவர்கள் “நரகம்” சென்றடைவதற்கான காரணமாகும். நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் இக்கூற்றினை அல்லாஹ் சுபஹானஹுதாலா அல்குர்ஆனில் பல இடங்களில் நிரூபித்திருக்கின்றான்.