பக்கம் 3
அல்குர்ஆனில் சொல்லப்படும் அல்-முஃமினீன் பாதை என்பது சஹாபாக்களின் பாதை என்பதன் ஆதாரங்கள்
அல்லாஹ் சுபஹானஹுதாலா “சூரத்துல் நிஸா”வில் கூறியுள்ளான்,
وَمَنْ يُّشَاقِقِ الرَّسُوْلَ مِنْۢ بَعْدِ مَا تَبَيَّنَ لَـهُ الْهُدٰى وَ يَـتَّبِعْ غَيْرَ سَبِيْلِ الْمُؤْمِنِيْنَ نُوَلِّهٖ مَا تَوَلّٰى وَنُصْلِهٖ جَهَـنَّمَ ؕ وَسَآءَتْ مَصِيْرًا
“நேரான வழி இன்னதென்று தெளிவான பின்னர் எவர், (நம்முடைய) இத்தூதருக்கு மாறு செய்து, விசுவாசிகளின் வழியல்லாத(வேறு வழியான)தைப் பின்பற்றுகிறாரோ அவரை நாம், அவர் திரும்பிய (தவறான) வழியிலேயே திருப்பிவிடுவோம். (பின்னர்) அவரை நரகில் புகுத்திவிடுவோம். அது சென்றடையுமிடத்தில் மிகக் கெட்டது. (நிஸா – 115)
“وَمَن يُشَاقِقِ الرَّسُولَ” – எவர்கள் தூதரிடம் இருந்து பிரிந்து செல்கின்றார்களோ
மேற்கூறிய வசனத்தில் “யுஹாலிபு ரசூல்” என்று அல்லாஹ் கூறவில்லை. மாறாக “يُشَاقِقِ الرَّسُولَ” என்றே அல்லாஹ் கூறியுள்ளான்.
“யுஹாலிபு ரசூல்” என்றால் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்கு எதிராகச் செல்கின்றவர்கள். இங்கு நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் எதிரியினைப் பற்றிக் கூறவில்லை. அதாவது , நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்கு எதிரி காபிராகும். ஆனால் “يُشَاقِقِ ” – பிரிந்து செல்பவன் என்ற சொல்லே பாவிக்கப்பட்டுள்ளது. அரபியில் “ஷக்கத் தியாப்” என்றால் ஆடையினை கிளித்தவர்கள். அதாவது, ஆடை ஒன்றாக இருக்கும் பொழுது பிரிக்க வேண்டுமெனில் ஆடையை கிளிப்பார்கள். அவ்வாறே, அருமை நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுடன் சேர்ந்து இருந்த ஒருவர் தான் அவரிடம் இருந்து பிரிந்து செல்ல முடியும். அதாவது இங்கு “உம்மதி” – ரசூல் சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பின்பற்றும் முஸ்லிம்களைப் பற்றியே பேசப்படுகின்றது. மாறாக, காபிர்களைப் பற்றி அல்ல.
தூதரிடம் இருந்து பிரிந்து செல்வது எப்படி என்றால் , நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுடைய வழிமுறைகளை அறியாமல், அவர்களுடைய வாழ்க்கையினை அறியாமல் தனக்கு தேவையான முறையில் நடை, உடை, பாவனைகள் அனைத்திலும், ஏனைய கொள்கை சுமந்து வாழ்ந்தால், நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடம் இருந்து பிரிந்து விடுவோம். நபி வழி என்ற வழிமுறையினை அறியாமல் தனக்கு தேவை மாதிரி நடை, உடை, பாவனைகளை பின்பற்றிக் கொண்டிருப்பவர்கள் எப்பொழுது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுடைய கல்வியினை பெற்றுக் கொள்வார்களோ, அப்பொழுது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களைப் பின்பற்றுவார்கள். அவர்களுடைய அன்றாட காரியங்கள் அனைத்திலும் இன்னும் ஏனைய விஷயங்களான குடும்பவாழ்வு, சமூகவாழ்வு அல்லது தனிப்பட்ட விடையங்கள் அனைத்திலும் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் அடிப்படையை பின்பற்றுவார்கள். இவ்வாறு பின்பற்றும் போது அவர்கள் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுடன் இணைந்தவர்களாக இருப்பார்கள்.