Skip to content
Part 4 of 5

பக்கம் 4

அல்குர்ஆனில் சொல்லப்படும் அல்-முஃமினீன் பாதை என்பது சஹாபாக்களின் பாதை என்பதன் ஆதாரங்கள்

நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)   அவர்களின் அடிப்படையை கற்கவில்லை என்றால், துன்யாவில் காணப்படும் எதாவது ஒன்றைப் பின்பற்றி வாழ்வார்கள். இதனால் அவர்கள் இன்னொரு கூட்டத்தினரோடு சேர்ந்துவிடுவாா்கள். அப்போது, நிச்சயமாக நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுடைய அடிப்படையில் இருந்து பிரிந்து செல்வார்கள். நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுடைய வழிமுறைகளுக்கு முக்கியத்துவம் அளிக்காமல் இருப்பதே நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)   அவர்களிடம் இருந்து பிரிந்து செல்வதற்கான காரணமாக அமையும். நபி வழியை விளங்குவதற்கு முயற்சிக்காமல் துன்யாவின் பிற விடையங்களுக்கு முக்கியத்துவம் அளித்தால் “கியாமத்” வாழ்வில் துன்யாவில் ஏதோவொரு வாழ்க்கையை வாழ்ந்தவராக , பின்பற்றியவராக  வருவார்கள். மறுமை நாளில் வந்து நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களைப் பின்பற்றியதாக கூறுவார்கள் . ஆனால், அவர்கள் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)   அவர்களைப் பின்பற்றி தனது வாழ்க்கையினை வாழ்தவர்கள் அல்ல. 

ஏனென்றால் அவர்களுடைய ஆடையில், குடும்பவாழ்க்கையில், கொள்கையில் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)   அவர்கள் எவைகளை எம்முறையில் முன்மாதிரியாக செயல்படுத்தினார்களோ , அம்முன்மாதிரிகளை அவ்வழிமுறையில் அவர்கள் பின்பற்றவில்லை. எனவே, நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)   அவர்களிடம் இருந்து பிரிந்தவர்களாகவே காணப்படுவார்கள். 

இதுவே “ يُشَاقِقِ الرَّسُولَ ”  - எவர் தூதரிடமிருந்து பிரிந்து செல்கின்றார்களோ ஆகும். 

மேலும், இஸ்லாமிய உம்மத்தில் உள்ள அனைவருக்கும்  நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களை முன்மாதிரியாக எடுக்கும்படி  அடையாளம் காட்டப்பட்டுள்ளது. அல்குர்ஆனிலும், அஸ்ஸுன்னாவிலும் சத்தியம் இருக்கின்றது என்று இஸ்லாமிய உம்மத் சந்தேகம் கொள்ளாத ஓர் விஷயம் ஆகும். அவைகளில் சத்தியம் உள்ளதென்று அனைத்து உள்ளங்களும் அறிந்த ஓர் உண்மை. அவைகளைப் பெற்றுக் கொண்டு நாம் பின்பற்ற வேண்டும். 

இதனைத்தான்  “مِنبَعْدِمَاتَبَيَّنَلَهُ الْهُدَىٰ” அவர்களுக்கு ஹிதாயத்ததை தெளிவு காட்டிய பின்னர், அதில் அவர்கள் கவனமில்லாமல் இருக்கின்றார்கள்;.

“وَيَتَّبِعْ غَيْرَ سَبِيلِ الْمُؤْمِنِينَ”  – அல்மூஃமினீன் பாதையைத் தவிர்ந்து ஏனைய பாதைகளைப்  பின்பற்றினால்

மேற்கூறிய வசனத்தில் “ الْمُؤْمِنِينَ “ என்ற வாா்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது  இந்த ஆயத் இறக்கப்பட்ட போது காணப்பட்ட “الْمُؤْمِنِينَ” அல்மூஃமினீகள் நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களும் ஸஹாபாக்களும் ஆவார்கள். அவர்களைத் தவிர வேறு எவரும் “الْمُؤْمِنِينَ” - அல்மூஃமினீகளாக அக்காலத்தில் இருக்கவில்லை.

அதாவது, எவரெல்லாம் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களும் , சஹாபாக்களும் இருந்த பாதைளைத் தவிர்ந்து வேறு பாதையில் செல்கின்றார்களோ, 

“ نُوَلِّهِ مَا تَوَلَّىٰ” - அவர்கள் எப்பாதையினை நோக்கிச் செல்கின்றார்களோ அப்பாதையிலேயே செல்வதற்கு அவர்களை விட்டு விடுவோம்.