Skip to content
Part 2 of 5

பக்கம் 2

அல்குர்ஆனில் சொல்லப்படும் அல்-முஃமினீன் பாதை என்பது சஹாபாக்களின் பாதை என்பதன் ஆதாரங்கள்

அல்லாஹ் சுபஹானஹுதாலா “சூரத்துல் பகரா”வில் கூறியுள்ளான்,

فَاِنْ اٰمَنُوْا بِمِثْلِ مَآ اٰمَنْتُمْ بِهٖ فَقَدِ اهْتَدَوْا ‌ۚ وَاِنْ تَوَلَّوْا فَاِنَّمَا هُمْ فِىْ شِقَاقٍ‌ ۚ فَسَيَكْفِيْکَهُمُ اللّٰهُ ‌ۚ وَهُوَ السَّمِيْعُ الْعَلِيْمُؕ‏

(விசுவாசம் கொண்டோரே!) நீங்கள் எதை ஈமான் கொண்டீர்களோ, அது போன்றதை அவர்களும் ஈமான் கொண்டுவிட்டால் திட்டமாக அவர்கள் நேர் வழியை அடைந்து விடுவார்கள். இன்னும், அவர்கள் புறக்கணித்துவிட்டால், நிச்சயமாக அவர்கள் பிளவில்தான் இருக்கின்றனர். அவர்களைப் பற்றி உங்களுக்கு(ப் பயம் வேண்டாம்!) அல்லாஹ் போதுமானவன். (சூரத்துல் பகரா – 137) 

அன்று அல்லாஹ் இவ்வாயத்தினை இறக்கும் போது “அவர்களும் விசுவாசம் கொண்டுவிட்டால் திட்டமாக அவர்கள் நேர் வழியை அடைந்து விடுவார்கள்” என்று கூறுவது முன்றாம் நபர்களை ஆகும்.  "அன்று துன்யாவில் தோற்றம் பெறாதவர்களும், நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுடன் காணப்படாதவர்களையே“  மூன்றாம் நபர்கள் என்று அல்லாஹ்  இந்த ஆயத்தில் குறிப்பிட்டுக் காட்டியுள்ளான். 

“فَإِنْ آمَنُوا” - அவர்கள் அனைவரும் ஈமானைப் பெற்றுக் கொண்டால்

“بِمِثْلِ مَا آمَنتُم”  - எம் முறையில் நீங்கள் ஈமான் பெற்றுக் கொண்டீர்களோ

மேற்கூறிய வசனத்தில் "ஆமன்த ”  - நீ என்று ஒருமையில் கூறாமல் "آمَنتُم" - நீங்கள் (நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களும், ஸஹாபாக்களும்) என்று பன்மையில் கூறியுள்ளான். அதாவது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)  அவர்களும் ஸஹாபாக்களும் எவ்வழிமுறையில் ஈமான் பெற்றுக் கொண்டார்களோ அவ்வழிமுறையில்  நீங்கள் ஈமான் பெற்றுக் கொண்டால்

“ فَقَدِ اهْتَدَوا ” – நேர்வழி அடைவீர்கள். 

அதாவது பின்பற்றும் வழிமுறையில் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)  அவர்களையும் ஸஹாபாக்களையும் முன்மாதிரியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.