Skip to content
Part 2 of 2

பக்கம் 2

ஸஹாபாக்கள் மத்தியில் பிரிவுகள் கிடையாது

மஃபத் அல் ஜுஹ்னியின் இவ்வாதத்தை அப்துல்லாஹ் இப்னு உமர் (رضي الله عنه) அவர்களும் இன்னும் ஏனையவர்களும் தவறென மறுத்தார்கள். அதன் பின்னால் ஈலான் அத்திமஷ்கி என்பவன் இர்ஜாவின் ("இர்ஜா"என்பது முர்ஜிய்யாவின் கொள்கையைக் குறிக்கிறது) வாதத்தை முன்வைத்தான். (அல் மிலல் வந்நிஹல்)


அதன் பின்னால் ஜஹ்ம் இப்னு ஸப்வான் என்பவனின் பெரும் பித்னா கிழக்கு நாடுகளில் பரவியது. அவன் அல்லாஹ்வின் பண்புகளை மறுத்தான். இது முஸ்லிம்களுக்கு அவர்களின் கொள்கையை சந்தேகத்துக்குரியதாக மாற்றி வைத்தது. இஸ்லாமிய உம்மத்தில் தோன்றும் தலைமுறைகளுக்கு இக்கொள்கை பெரும் துர்ப்பாக்கிய நிலையை உருவாக்கி விட்டது. 

அஹ்லுஸ்ஸுன்னாவைச் சேர்ந்தவர்கள் ஜஹ்மிய்யாவின் பித்அத்தில் மிகவும் கவனமாக இருந்ததோடு அதனைப் பற்றி மக்களுக்கு எச்சரிக்கையும் செய்தார்கள். 


அக்காலப்பகுதியில்தான் வாஸில் இப்னு அதா என்பவனால் முஃதஸிலா கொள்கை (மத்ஹபுல் இஃதிஸால்) உருவானது. முஃதஸிலாக்கள் ஹவாரிஜைப் போன்றும் ஷீஆக்களைப் போன்றும் அரசியல் சார்ந்த அணுகுமுறையில் செயற்படவில்லை. 


முஸ்தஸிலாவின் போக்கு முற்றிலும் அறிவு சார்ந்ததாக அமைந்திருந்தது. முஸ்தஸிலாவின் மத்ஹப் வாதத்தை அடிப்படையாகக் கொண்டதாகும். அவர்களின் கருத்துகளை பலப்படுத்துவதற்கு அவர்கள் யூனானிலிருந்து வந்த "மன்திக்" எனப்படும் "தர்க்கக் கல்வியையும்"  "பல்ஸபா" எனப்படும் "தத்துவத்தையும்" பயன்படுத்துவார்கள். அதனை அடிப்படையாகக் கொண்டுதான் முஃதஸிலாக்கள் ஸஹீஹாக வந்த ஆஹாத்  ஹதீஸ்களை மறுக்கிறார்கள்.