பக்கம் 1
இப்லீஸ் கற்றுக் கொடுத்த பெருமை
இப்லீஸ் கற்றுக் கொடுத்த பெருமை
ஷெய்க் யஹ்யா சில்மி அஸ்ஸைலானி ஹபிழஹுல்லாஹ்
بــــــــــــــــســـــم الله الرحـــــــمــــن الرحـــــــــيــم
الحمد لله رب العالمين والصلاة والسلام على من لا نبي بعده اما بعد
வழிகேடர்களின் தலைவனான இப்லீஸ்தான் முதல் முதலாக அல்லாஹ்விற்கு கீழ்படியாமல் மாறு செய்கின்ற வழிமுறையை உருவாக்கினான். அவனுடைய அந்தப் பண்பை அந்த இப்லீஸ் மனிதர்களுக்கும் கற்றுக் கொடுத்து விட்டான். இப்லீஸ் அவனது கீழ்படிதலைக் காட்ட மறுத்ததை அல்லாஹ் அல் குர்ஆனில் கூறிக் காட்டுகிறான்.
قَالَ مَـا مَنَـعَكَ أَلاَّ تَسْجُدَ إِذْ أَمَرْتُكَ ۖ قَالَ أَنَا خَيْرٌ مِّنْهُ خَلَقْتَنِي مِن نَّارٍ وَخَلَقْتَهُ مِن طِينٍ
(அல்லாஹ் இப்லீஸிடம்) 'நான் உனக்குக் கட்டளையிட்ட சமயத்தில் நீ சிரம் பணிவதிலிருந்து உன்னைத் தடுத்தது எது?' என்று கேட்டான்ளூகேட்டான் அதற்கு, 'நான் அவரை விட மேலானவன் (ஏனென்றால்) நீ என்னை நெருப்பால் படைத்தாய் அவரையோ களிமண்ணால் படைத்தாய்' என்று (இறுமாப்புடன் இப்லீஸ்) கூறினான்۔ (அல்குர்ஆன் 7:12)
அல்லாஹ் மனிதர்களை அவனது அடிமையாகப் படைத்திருக்கிறான். ஆனால் ஷைத்தானைப் பின்பற்றிய மனிதன் 'நான் தான் பெரியவன்' என்ற ஆணவத்தை தனக்குள் வளர்த்துக் கொண்டதனால் தனது இரட்சகனுக்குக் கீழ்படியும் பண்பை இழந்து விட்டார்கள்.
அல்லாஹ் இப்லீஸுக்கு கட்டளையிட்ட வேளையில் அந்தக் கட்டளைக்குக் கீழ்படிந்து செல்லாமல் தனது சுய புத்தியைப் பயன்படுத்தி நான் அவரை விட மேலானவன் என்று இப்லீஸ் கூறினான். அவனை அவ்வாறு கூற வைத்தது அவனிடமிருந்த பெருமை என்ற பண்புதான்.