பக்கம் 2
இப்லீஸ் கற்றுக் கொடுத்த பெருமை
ஷைத்தானிடமிருந்த பெருமை என்ற பண்பு மனிதனிடமும் இருப்பதனால்தான் அந்தப் பண்பு மனிதர்களையும் வழிகேட்டில் இட்டுச் செல்கிறது. அனைத்து மலக்குகளும் அல்லாஹ்வின் ஏவலுக்குக் கீழ்படிந்து ஆதமுக்கு சிறம்பணிந்த போது அல்லாஹ்வின் ஏவலுக்கு கீழ்படிய மறுத்த ஷைத்தான் அல்லாஹ்வோடு வாதாடத் தொடங்கினான். ஷைத்தானின் பண்பான பெருமை மனிதர்கள் வழிகெடுவதற்கு மிக முக்கிய காரணங்களில் ஒன்றாக இருக்கிறது என்பதை நன்கு புரிந்து கொள்ளுங்கள்.
பெருமையின் ஆகவும் உயர்ந்த நிலை எது என்று நீங்கள் அறிவீர்களா ?. பெருமையின் ஆக உயர்ந்த நிலைதான் அல்லாஹ்வின் வேதத்தில் நமது சுய புத்தியுடன் பேசுவது !. பெருமை என்பது கீழ்படிதல் என்ற தன்மைக்கு முரணானது !.
மனிதனைப் படைத்தவன், மனிதனின் தன்மையைப் புரிந்தவன், அகிலத்தின் அனைத்தையும் படைத்துப் பரிபாலிக்கின்றவன், அகிலத்தின் இரட்கசன் அல்லாஹு தஆலா அவன் புறத்திலிருந்து அவனுடைய சட்டத்தை இறக்கும் போது, அவனுடைய உண்மையான அடிமை எவ்வாறு தன் இரட்சகனுக்குக் கீழ்படியாமல் தன் சுய புத்தியின் அடிப்படையில் தர்க்கம் செய்ய முயற்சி செய்வான்?
தர்க்கம் செய்வது ஷைத்தானின் பண்புகளில் மிக முக்கிய பண்பாக இருக்கிறது. பெருமை என்ற இப்லீஸின் பண்புதான் மனிதனை வழிகெடுத்து விட்டது என்ற உண்மையை நாம் நன்கு விளங்கி அப் பண்பில் இருந்து நாம் அல்லாஹ்விடத்தில் பாதுகாவல் தேடிக்கொள்ள வேண்டும்.
அல்லாஹ் மிக அறிந்தவனாக இருக்கின்றான்.