ஒருவர் தவ்பா செய்த பின்னாலும் அவரது செயல் மறுமையில் மீஸானில் (தராசில்) நிறுப்பதற்காக வைக்கப்படுமா?
May 2020
ஒருவர் தவ்பா செய்த பின்னாலும் அவரது செயல் மறுமையில் மீஸானில் (தராசில்) நிறுப்பதற்காக வைக்கப்படுமா?
ஷெய்க் யஹ்யா ஸில்மி அஸ் ஸைலானி ஹபிழஹுல்லாஹ்
بــــــــــــــــســـــم الله الرحـــــــمــــن الرحـــــــــيــم
الحمد لله رب العالمين والصلاة والسلام على من لا نبي بعده اما بعد
கேள்வி :
ஒருவர் தவ்பா செய்த பின்னாலும் அவரது செயல் மறுமையில் மீஸானில் (தராசில்) நிறுப்பதற்காக வைக்கப்படுமா?
பதில் :
ஒருவரது தவ்பா மன்னிக்கப்படவில்லை என்றால் அவரது செயல் மீஸானில் வைக்கப்படும். தவ்பா செய்தவருடைய நிலையையும், அவருடைய தவ்பா ஏற்றுக் கொள்ளவதற்கு தகுதியானதா என்பதையும் அல்லாஹ்வே மிக அறிந்தவன்.
சிலர் தங்களின் பாவங்களுக்காக அல்லாஹ்விடம் அழுது, புழம்பி தவ்பா செய்கிறார்கள். ஆனால் அதே தவறை மீண்டும், மீண்டும் செய்கிறார்கள்.
கல்வியை சுமந்தவர்கள் (அஹ்லுல் இல்ம்) கூறுவார்கள்,
'ஒருவருடைய தவ்பா ஏற்றுக் கொள்ளப்பட்டதன் அடையாளம், அவர் அத்தவறை மீண்டும் செய்யாது இருப்பதாகும்'
ஒருவர் தான் செய்த தவறுக்காக தவ்பா செய்த பின்னாலும், அத்தவறை மீண்டும் செய்தால் அவர் தான் செய்த தவறை இன்னும் உணரவில்லை. அவ்வாறு அவர் செய்யும் பொழுது அவரது அச்செயல் மீஸானில் வைக்கப்படுவதற்குத் தகுதியான நிலையில்தான் இருக்கிறது.
அல்லாஹ்வே மிக அறிந்தவன்.