பக்கம் 6
அல்-குர்ஆனின் தமிழாக்கங்களும் தமிழ் விளக்கவுரைகளின் உண்மை நிலைப்பாடும்
அருஞ்சொல் விளக்கம்
1. ஸஹாபாக்களின் விளக்கம் : இஸ்லாமிய மார்க்கத்தின் அடிப்படையான அல் குர்ஆனையும் அஸ் ஸுன்னாஹ்வையும், நபி அவர்கள் உருவாக்கிய “அல்-ஜமாஅத்” (நபியும் ஸஹாபாக்களும்) புரிந்து பின்பற்றிய வழிமுறையின் விளக்கம்.
2. தஃப்ஸீர் இப்னு கஸீர்: அஹ்லுஸ் ஸுன்னாஹ்வின் அறிஞர்களில் ஒரு மிகச் சிறந்த அறிஞராக திகழ்ந்த இமாம் இப்னு கஸீர் (701-765 ஹி) அவர்கள் அல்-குர்ஆனிற்கு எழுதிய விளக்கவுரை தான் தஃப்ஸீர் இப்னு கஸீர் ஆகும். இவருடைய ஆசிரியர்களில் சிலர் இமாம் இப்னு தைமிய்யா, இமாம் அத்-தஹபி ஆவார்கள். இவரை அஹ்லுஸ் ஸுன்னாஹ்வின் உலமாக்கள் “முஃப்தி, முஹத்திஸ்” என்று அழைப்பார்கள்.
3. அஹ்லுஸ் ஸுன்னாஹ் உலமாக்கள்: அல்-குர்ஆன் மற்றும் அஸ்-ஸுன்னாஹ்வை ஸஹாபாக்களின் விளக்கத்தில் அன்றிலிருந்து இன்று வரை சுமக்கும் அறிஞர்களை அஹ்லுஸ் ஸுன்னாஹ்வின் அறிஞர்கள் என்று அழைக்கப்படும்.
4. முஹம்மது அலி அஸ்-ஸாபூனி : இவர் 1930ஆம் ஆண்டு சிரியாவின் ஹலபில் பிறந்தவர். மக்காவின் உம்முல் குரா பல்கலைகழகத்தில் ஆசிரியராக இருந்தாலும், இவர் ஒரு வழிகெட்ட சூஃபி, அஷ்அரி மற்றும் ஹனஃபி ஆவார். இவர் தஃப்ஸீர் இப்னு கஸீர் மற்றும் தஃப்ஸீர் அத்-தபரி இரண்டையும் ஒருங்கிணைத்து ஸிஃபத்து தஃபாஸீர் என்று ஒரே நூலாக்கியிருக்கிறார். இவருடைய தவறுகளும் வழிகேடுகளும் அறிஞர்களின் கல்வித் தரத்தில் இருப்பதனால் பொது மக்கள் அதனை கண்டறிந்து தங்களை தற்காக்க முடியாது. பல அறிஞர்கள் இவருடைய பேச்சுகளையும் நூற்களையும் குறித்து எச்சரித்துள்ளார்கள்.
5. ஹனஃபீ : இமாம் அபு ஹனீஃபா அவர்களை பின்பற்றுகிறோம் என்று கூறுபவர்கள் தான் தங்களை ஹனஃபீயாக்கள் என்று கூறுகிறார்கள். ஆனால் நிஜத்தில் அவ்வாறில்லை. இந்த மத்ஹபுகள் அனைத்தும் ஸஹாபாக்களின் காலத்திற்குப் பிறகு உருவாக்கபட்டதே ஆகும். ஆதாரப்பூர்வமான ஹதீஸாக இருந்தாலும் ஒரு குறிப்பிட்ட அறிஞரை மட்டும் கண்மூடித்தனமாக பின்பற்றுவது தான் இவர்களின் வழிகேடாகும். ஆசியாவில் பெரும்பாலான மக்களும் தியோபந்து என்ற கூட்டமும் இந்த மத்ஹபை தான் பின்பற்றுகின்றனர்.