Skip to content
Part 5 of 7

பக்கம் 5

அல்-குர்ஆனின் தமிழாக்கங்களும் தமிழ் விளக்கவுரைகளின் உண்மை நிலைப்பாடும்

செய்யிது குதுப் (1906-1966) :

இவர் எகிப்து நாட்டை சேர்ந்தவர். தக்ஃபீரி மற்றும் ஹவாரிஜின் கொள்கைகளை சுமந்து இஹ்வானுல் முஸ்லிமீன் இயக்கத்தில் சேர்ந்து கொண்டார். இவருடைய ஃபீ ழிழாலில் குர்ஆன், மைல் கற்கள் போன்ற நூற்கள் குஃப்ர் நிறைந்ததாகவும் ஸுன்னாஹ்விலிருந்து வழிகெட்டதாகவும் உள்ளது. இன்று உம்மத்தில் தீவிர போக்கு உடையவர்களின் மத்தியில் பெரிய தாக்கத்தை இவருடைய நூற்கள் ஏற்படுத்துகிறது.

 

மவ்லானா மவ்தூதி (1903-1979):

இவர் இந்தியா பாகிஸ்தான் பிரிவினைக்கு முன்பு இந்தியாவில் பிறந்தவர். ஜமாஅத்தே இஸ்லாமி என்ற அமைப்பை 1941ல் ஆரம்பித்தார். அவர் ஒரு முஃதசிலி, ஹனஃபி, ஹதீஸை மறுப்பவர் மேலும் ஷியாவின் தலைவரான கொமைனியின் ஆதரவாளர் ஆவார். தஹ்ஃபீமுல் குர்ஆன் என்ற இவருடைய நூல் நபிமார்கள் மற்றும் ஸஹாபாக்களுக்கு எதிராக பல வழிகேடான கருத்துக்களை கொண்டிருக்கிறது. சவூதி நாட்டின் அரசு இவரை அறிஞர் என்று பட்டமளித்திருந்தாலும், அந்நாட்டின் உலமாக்களும், அஹ்லுஸ் ஸுன்னாஹ்வின் உலமாக்களும் இவரை பற்றி எச்சரித்தும் இவருடைய வழிகேட்டை குறித்து நூற்களில் எழுதியும் உள்ளனர்.

 

 

 

அப்துல்லாஹ் யூஸுஃப் அலி (1872-1953):

இவர் இந்திய நாட்டை சேர்ந்தவர் ஆவார். அல் குர்ஆனின் ஆங்கில மொழிபெயர்ப்பில் பிரபலமானவர். ஷியா மற்றும் முஃதஸிலாவின் அகீதாவால் கவரப்பட்டவர். அவருடைய மொழிபெயர்ப்புகளில் பல வழிகேடுகளும், மறுப்புகளும் தத்துவ ரீதியான விளக்கங்களும் உள்ளன.

 

மர்மடூக் பிக்தால் (1875-1936):

இவர் பிரிட்டன் நாட்டை சேர்ந்தவர். அல் குர் ஆனின் ஆங்கில மொழிபெயர்ப்பான “தி மீனிங்க் ஆஃப் தி க்ளோரியஸ் குர்ஆன்” என்ற தர்ஜுமாவால் பிரபலமானவர். இவர் ஒரு ஓரியண்டலிஸ்ட் (அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளிலுள்ள கலாச்சார கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு இஸ்லாமிய மார்க்கத்தை விளங்குபவர்கள்). இவருடைய மொழிபெயர்ப்பில் பல வழிகேடுகள் இருப்பினும் எகிப்தின் அல் அஸ்ஹர் பல்கலைகழகம் அதனை அங்கீகரித்திருக்கிறது.