Skip to content
Part 3 of 7

பக்கம் 3

அல்-குர்ஆனின் தமிழாக்கங்களும் தமிழ் விளக்கவுரைகளின் உண்மை நிலைப்பாடும்

பாகவி தமிழ் மொழிபெயர்ப்பு அரபி நூலிலிருந்து மொழிபெயர்ப்பு செய்திருந்தாலும் யூசுப் அலி, பிக்தால் போன்ற வழிகேடான மொழிபெயர்ப்புகளை எடுத்துக்காட்டாகக் கொண்டு தமிழாக்கம் செய்யப்பட்டதாகும். மேலும் பாகவி மொழிபெயர்ப்பு சூஃபீ, அஷ்அரி கொள்கைகளையும் சுமந்துள்ளது. யூசுப் அலி மொழிபெயர்ப்பில் காதியானி9 கொள்கை உள்ளது. பிக்தால் மொழிபெயர்ப்பில் முஃதஸிலாவின்10 கொள்கை உள்ளது. இவ்வழிகேடுகளை உள்ளடக்கிய மொழிபெயர்ப்பாக பாகவி மொழிபெயர்ப்பு இருக்கிறது.

மவ்தூதியினுடைய தஃப்ஹீமுல் குர்ஆன், முஹம்மது பின் உமர் அல் வாகிஃபீ11 உடைய பொய்யான அறிவிப்புகளையும், இப்னு அப்பாஸின் பெயரில் இட்டுக்கட்டிய வழிகேடான அறிவிப்புகளையும் உள்ளடக்கிய நூல் ஆகும். ஆனால் இதுவும் தமிழாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. மேலும் செய்யது குதுப் உடைய ஃபீ ழிலாழில் குர்ஆன் என்னும் அரபி நூல், பொய் அறிவிப்புகளும், 72 வழிகேடான கூட்டங்களின் வாதங்களும், தர்க்கங்களும் சூஃபி கருத்துகளையும் கொண்டு தொகுக்கப்பட்ட நூல் ஆகும்.இதுவும் தமிழாக்கம் செய்யப்பட்டிருக்கிறது.

பீ.ஜே உடைய தமிழாக்கம், வழிகேட்டில் தனித்துவத்தின் உச்சியை அடைந்த ஒரு தமிழாக்கம் ஆகும். பீ.ஜே அல்-குர்ஆன் ஆயத்துக்களில் மாற்றம் செய்து, ஆயத்தின் நம்பிக்கையில் முரண்பாடுகளை எழுதி, அல்லாஹ்வின் ஆயத்திற்கு தன் சுய புத்தியால் விளக்கம் கொடுத்து தடுமாறினார். சிந்தனை ரீதியான விளக்கங்களைக் கொடுத்து பீ.ஜே வழிகேட்டின் உச்சத்தை தொட்டு விட்டார். அன்சாருஸ் ஸுன்னாஹ் முஹம்மதியாவிலிருந்து வெளியிட்ட மொழிபெயர்ப்பு, பீ.ஜே உடைய மொழிபெயர்ப்பாகும். பீ.ஜேவின் மொழி பெயர்ப்பை வாசிப்பது ஹராம் என்ற தீர்ப்பை நாங்கள் வைத்தவுடன், தங்களின் வெளியீட்டை ஆய்வு செய்து மறுவெளியீடு செய்வோம் என்று அபூபக்ர் சித்தீக் மதனியும் அவரோடு உடனிருக்கும் அன்சாருஸ் ஸுன்னாஹ் முஹம்மதிய்யாவை சார்ந்தவர்களும் கூறினார்கள். ஆனால் பீ.ஜே வின் பெயரை மாற்றி அவர்களது பெயரை அச்சிட்டதைத் தவிர அதில் எந்த ஒரு மாற்றத்தையும் அவர்கள் செய்யவில்லை.

இதுதான் தமிழ் மொழிபெயர்ப்புகளின் நிலை. இது தமிழ் பேசும் முஸ்லிம்களுக்கு ஒரு துர்பாக்கியமாக இருந்தாலும், இதுவே உண்மை நிலையாகும். இதுதான் அல்-குர்ஆனின் தமிழாக்கத்தை பற்றிய சுருக்கமான செய்தி ஆகும்.