Skip to content
Part 2 of 7

பக்கம் 2

அல்-குர்ஆனின் தமிழாக்கங்களும் தமிழ் விளக்கவுரைகளின் உண்மை நிலைப்பாடும்

அல்-குர்ஆனின் தமிழாக்கங்கள் ஒரு பார்வை:

தமிழ் மொழியில் அல்-குர்ஆனின் விளக்கம் பார்ப்பதற்கு தகுதியான நூல் ஒன்று கிடையாது. தமிழ் மொழியில் பிரபலமாக வெளிவந்த அல்-குர்ஆன் மொழிபெயர்ப்புகளில் சில:

1.   கிங் ஃபஹத் பிரிண்டிங்க் காம்பிளக்ஸ் சவூதி அரேபியா – முதல் பதிப்பு க்ஷெய்க் முஹம்மது இக்பால் மதனி

2.   மூன் பப்ளிகேஷன்ஸ் – ஆசிரியர்: பீ. ஜெய்னுல் ஆபிதீன்

3.   ஜான் டிரஸ்ட் பப்ளிகேஷன்ஸ் – டாக்டர் S. முஹம்மது ஜான்

4.   தர்ஜுமத்துல் குர் ஆன் பி அல்தஃபில் பயான் – ஆ.கா. அப்துல் ஹமீது பாகவி

5.   அன்சாருஸ் ஸுன்னாஹ் முஹம்மதியா சிறீ லங்கா வெளியீடு

6.   குர் ஆனின் நிழலில் (ஃபீ ழிலாலில் குர்ஆன்) – செய்யது குதுப்

7.   தஃப்ஹீமுல் குர்ஆன் – இஸ்லாமிக் ஃபௌண்டேஷன் டிரஸ்ட் – மௌலானா மௌதூதி

 

இவை எதுவும் தஃப்ஸீர் (விளக்கவுரை) பார்ப்பதற்கு தகுதியானவை அல்ல. ஆயினும் ஷெய்க் முஹம்மது இக்பால் மதனி அவர்களின் மொழிபெயர்ப்பு மட்டும் வழிகேடுகளிலிருந்து தப்பியது ஆகும். தஃப்ஸீர் அல்லாமல், அல்-குர்ஆனின் தமிழாக்கத்திற்கு முஸ்லிம்கள் பயன்படுத்துவதற்கு ஷெய்க் இக்பால் மதனி அவர்களின் தொகுப்பு தகுதியானதாகும். இதில் மற்ற மொழி பெயர்ப்பில் உள்ள வழிகேடுகள் இல்லை. மற்ற மொழிபெயர்ப்புகள் அனைத்தும் வழிகேட்டில் தள்ளிவிடும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

 

அல்-குர்ஆனுடைய அடிப்படையான விளக்கங்களில், அல்லாஹ்வுடைய நம்பிக்கையில், மறுமையைப் பற்றிய நம்பிக்கையில், ஹதீஸ் அறிவிப்புகளில் மற்றும் அல்-குர்ஆனின் தஃப்ஸீர் விளக்கங்களில், ஏராளமான, வழிகேடான பொய் அறிவித்தல்களையும், வழிகேடான கொள்கைகளையும், அடிப்படையாகக் கொண்ட நூற்களிலிருந்து தமிழுக்கு மொழி பெயர்திருப்பது தான் ஜான் டிரஸ்ட் உடைய மொழிபெயர்ப்பாகும்.