பக்கம் 4
அல்-குர்ஆனின் தமிழாக்கங்களும் தமிழ் விளக்கவுரைகளின் உண்மை நிலைப்பாடும்
ஷெய்க் இக்பால் மதனியின் தமிழாக்கம்:
தமிழ் மொழிபெயர்ப்புகளில் ஷெய்க் இக்பால் மதனி அவர்களுடைய மொழிபெயர்ப்பு வழிகேடுகளை விட்டு தப்பியதாகும். அதில் மனிதன் என்ற ரீதியில் இழைத்த தவறுகள் சில இருந்தாலும் மற்ற மொழிபெயர்ப்புகளில் உள்ள வழிகேடுகளை தவிர்த்திருக்கிறது. அல்லாஹ் அதற்கும் மேல் சிறப்பான ஒரு மொழிபெயர்ப்பை வெளியிடுவதற்கு நமக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்றும், நபிவழி, ஸஹாபா விளக்கம் உள்ள ஸலஃபுஸ் ஸாலிஹீன்களின் சிறப்பான மொழி பெயர்ப்புகள் மற்ற அச்சகங்களிலும் பதிப்பகங்களிலும் வெளிவரவேண்டும் என்று நாம் துஆ கேட்கிறோம்.
-(ஷெய்க் யஹ்யா ஸில்மி ஹஃபிழஹுல்லாஹ் அவர்களின் தஃப்ஸீர் இப்னு கசீர் வகுப்பிலிருந்து தொகுக்கப்பட்டது)
தகுதியற்ற தர்ஜுமாக்களும் அதன் ஆசிரியர்களும்
அப்துல் ஹமீது பாகவி (1294-1375) :
வேலூரில் அமைந்துள்ள சூஃபி மற்றும் ஹனஃபி கொள்கைகளை சுமந்த பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் மதரஸாவின் முதல் அணி மாணவர்களில் ஒருவராவார். 1949 ஆம் ஆண்டு அல்-குர்ஆன் தர்ஜுமாவின் முதல் பதிப்பை வெளியிட்டார். ஹதீஸ் மறுப்பாளரான மவ்தூதியின் சிந்தனைகளால் கவரப்பட்டவர் ஆவார்.
பி. ஜைனுல் ஆபிதீன் (1953):
தமிழ்நாட்டின் தொண்டி என்ற ஊரில் பிறந்தவர். தீவிரப் போக்கில் வாதம் விவாதங்களில் ஈடுபடுவதில் பெயர்போன அமைப்பான தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் என்ற வழிகெட்ட கூட்டத்தை 2004ல் உருவாக்கியவர். இவருடைய பேச்சில் தீவிர குஃப்ரும், ஹதீஸ் மறுப்பும், ஸஹாபாக்களை இழிவுபடுத்துவதையும் காணலாம்.
டாக்டர் S. முஹம்மது ஜான் :
இவருடைய பிறப்பு இறப்பு பற்றிய செய்திகள் தெரியவில்லை. ஜான் டிரஸ்ட் வெளியிடும் “குர்ஆன் மஜீத் மூலமும், தமிழ் உரையும்” என்ற வெளியீட்டின் முன்னுரையில் முஹம்மது ஜான் அவர்களே தன்னுடைய மொழிபெயர்ப்பை பற்றி கூறியிருக்கிறார்கள். 1946ல் வோகிங்க் முஸ்லிம் இயக்கம் என்று இங்கிலாந்தில் உள்ள அஹமதிய்யா (காதியானி) கொள்கை உடையவர்களால் ஆரம்பிக்கப்பட்ட இயக்கத்தில் தான் இணைந்ததாகவும் அதன் பிறகு தான் மொழிபெயர்ப்பு செய்வதில் ஆர்வம் கொண்டதாகவும் கூறுகிறார். யூஸுஃப் அலியின் ஆங்கில மொழிபெயர்ப்பை அடிப்படையாகக் கொண்டு தான் தமிழ் மொழிபெயர்ப்பு செய்ததாக ஒப்புக்கொண்டிருக்கிறார்.