Skip to content
Part 1 of 7

பக்கம் 1

அல்-குர்ஆனின் தமிழாக்கங்களும் தமிழ் விளக்கவுரைகளின் உண்மை நிலைப்பாடும்

அல்-குர்ஆனின் தமிழாக்கங்களும் தமிழ் விளக்கவுரைகளின் உண்மை நிலைப்பாடும்

ஷெய்க் யஹ்யா ஸில்மி அஸ் ஸைலானி ஹபிழஹுல்லாஹ்

بــــــــــــــــســـــم الله الرحـــــــمــــن الرحـــــــــيــم

الحمد لله رب العالمين والصلاة والسلام على من لا نبي بعده اما بعد

அல்-குர்ஆனின் மொழிபெயர்ப்பும் விளக்கவுரையும் அமைய வேண்டிய வழிமுறை:

தமிழ் உலகில் உள்ள தஃப்ஸீர்கள் அனைத்தும், அல்-குர்ஆனிற்கு ஸஹாபாக்களின் விளக்கம் இல்லாமல் கொடுக்கப்பட்ட விளக்கங்களே ஆகும்! இவ்வகையான நூற்களை விட்டு நாம் விலகி இருக்க வேண்டும். மாறாக அந்நூற்களில் சத்தியத்தையும், விளக்கங்களையும் தேடினால் அவை நம்மை நாசமாக்கிவிடும். ஸஹாபாக்களின் விளக்கத்தை1 நிபந்தனையாக்கிக் கொண்ட உலமாக்களின் நூற்களுடன் மட்டுமே நாம் அடங்கியிருக்க வேண்டும். அதில் தான் நாம் நம் மார்க்கத்தை படிக்கவேண்டும், தெளிவுபெறவேண்டும். இந்த அடிப்படையில் அமைந்த பல நூற்களில் சிறப்பான ஒன்று தஃப்ஸீர் இப்னு கஸீர்2.

தஃப்ஸீர் இப்னு கஸீரின் மொழிபெயர்ப்பிலும், சுருக்கங்களிலும் (முக்தஸர்) நடந்த அநியாயங்கள்:

இந்த உலகத்தில், ஒரு முஸ்லிம், குர்ஆனின் விளக்கத்தைப் பெற்றுக் கொள்வதற்கு சிறப்பான தப்ஸீர்களில் ஒன்று தஃப்ஸீர் இப்னு கஸீர் ஆகும். அஹ்லுஸ் ஸுன்னாஹ்வின் உலமாக்கள்3 ஒட்டுமொத்தமாக இந்நூலை சிறப்பான ஒரு நூலாக கருதி விட்டார்கள். சகோதரர்களே! இவ்வாறு இந்த தஃப்ஸீர் இப்னு கஸீர் தெளிவான விளக்கமுள்ள கிதாபாக இருக்க இதற்கு பல வழிகேடர்கள் முக்தஸர் (சுருக்கம்) எழுதுகிறோம் என்று சொல்லி அதற்கு முரண்பாடுள்ள கருத்துக்களையும் ஸஹாபாக்களின் விளக்கத்திற்கு முரணானவைகளையும் தொகுத்து சூழ்ச்சி செய்தார்கள். அதில் மிக முக்கியமான வழிகேடர், முஹம்மத் அலி அஸ்ஸாபூனி4. இவர் ஹனஃபி5, அஷ்அரி6, சில விஷயத்தில் மாதுருத்தீ7 மற்றும் ஸுஃபீ8 கருத்துக்களை சுமந்தவர் ஆவார். இவர் ஸஹாபாக்களின் கருத்துக்கு முரணான ஒரு ஷைத்தான். இவர் ஆலிமாக இருந்தாலும், மொழிபெயர்ப்பில் கெட்டிக்காரராக இருந்தாலும், அஹ்லுல் ஹதீஸி வல் அஸருக்கு எதிராக தன் பேனாவால் போராட்டம் செய்தவராவார்.

இமாம் இப்னு கஸீர் உடைய கொள்கையின் எதிரியாக இருந்து முக்தஸர் தஃப்ஸீர் இப்னு கஸீர் என்ற நூலை தொகுத்தார். இன்று தமிழ் உலகின் மதரஸாக்களில் தஃப்ஸீர் இப்னு கஸீர் எடுப்பதாக நினைத்து முக்தஸர் தப்ஸீர் இப்னு கஸீரை நடத்துகிறார்கள். ஆனால் முஹம்மது அலி அஸ்ஸாபூனியின் கிதாப் நாசமானது, வழிகேடானது. தஃப்ஸீர் இப்னு கஸீர் படிப்பதாக நினைத்து அதற்கு முரணானதை இன்று தமிழ் உலகின் மதரஸாக்களில் படிக்கிறார்கள். இந்த கிதாப் தஃப்ஸீர் பார்ப்பதற்கு தகுதியானதல்ல மாறாக ஒரு வழிகேடான கிதாப் ஆகும்.