பக்கம்-3.
எகிப்து நாட்டின் ஜாமியதுல் அஸ்ஹர் உருவாகிய வரலாறும் மீலாத் நபி விழாவின் ஆரம்பமும் -
ஜாமியதுல் அஸ்ஹரில் வழிகேடர்கள் தங்களின் கொள்கையை உலகில் பரப்புவதற்காக அங்கே கல்வி கற்பவர்களுக்கு வழிகேடுகளின் அடிப்படையில் உஸுல்கள் என்றும் பிக்ஹ் என்றும் ஹதீஸ் என்றும் கற்றுக் கொடுத்தார்கள். வழிகெட்ட பிரிவுகளை வளர்க்கும் திறமையுள்ள பகீஹ், முஹத்திஸ், முபஸ்ஸிர், முப்தி போன்றவர்கள் அக்கலாசாலையில் இருந்து பட்டதாரிகளாக வெளிவருகிறார்கள்.
இவ்வனைத்து நடவடிக்கைகளுக்கும் அஸ்திவாரம் அமைத்துக் கொடுப்பதில் ஜாமியதுல் அஸ்ஹர் பெரும் பங்கு வகிக்கிறது. இக்கல்வி நிலையம் என்று ஆரம்பிக்கப்பட்டதோ அன்றிலிருந்தே இஸ்லாமிய உம்மத்தில் அனைத்து வழிகேடுகளும் வழிகேடர்களும் வளர்வதற்கு ஒரு இடம் கிடைத்து விட்டது.
அது மட்டுமின்றி மத்ஹப்களையும் முஃதஸிலா கொள்கையையும் இன்னும் மார்க்கத்தில் பிற்காலத்தில் வழிகேடர்களால் புகுத்தப்பட்ட மன்திக் (தர்க்கம்), பல்ஸபா (தத்துவம்), இல்முல் கலாம் போன்றவைகளையும் ஜாமியதுல் அஸ்ஹர் வளர்த்தது.
அதே போன்று ஜாமியதுல் அஸ்ஹரிலிருந்து வெளிவருகின்றவர்கள் முஸ்லிம்களிடத்தில் தலைவர்களாக மதிக்கப்பட்டார்கள்.
இதன் விளைவாக ஜாமியதுல் அஸ்ஹரின் மேல் முஸ்லிம்களுக்கு ஒரு மதிப்பு ஏற்பட்டது. அத்துடன், ஜாமியதுல் அஸ்ஹரிலிருந்து வெளிவருகின்றவர்கள் யாராக இருந்தாலும் அவர்ளைப் பற்றி எவ்விதக் கேள்வியும் இல்லாமல் மனப்பூர்வமாக அவர்களை உலமாக்களாக ஏற்றுக் கொள்ளும் நிலைக்கு முஸ்லிம்கள் வந்துவிட்டார்கள்.
இன்று இஸ்லாமிய உம்மத்தில் அனைத்து வழிகேடுகளுக்கும் வளர்வதற்கு ஜாமியதுல் அஸ்ஹருக்கு பெரும் பங்கிருக்கிறதென்று சொன்னால் அது மிகையாகாது.
Ref : பிரிவுகள் பற்றிய உண்மைகளும் கொள்கையில் வந்த மாற்றங்களும்