பக்கம் -2.
எகிப்து நாட்டின் ஜாமியதுல் அஸ்ஹர் உருவாகிய வரலாறும் மீலாத் நபி விழாவின் ஆரம்பமும் -
றஸுலுல்லாஹ்வின் பிறந்த தினம் தொடர்பாக உலமாக்களில் பலரும் பலவாறான கருத்துக்களைக் கூறியிருந்தாலும் அவற்றுக்கு எவ்வித உறுதியான ஆதாரமும் இல்லை.
பாத்திமியாக்கள் றஸுலுல்லாஹ்வின் இறந்த தினத்தை பிறந்த தினமாகக் காட்டி அந்நாளைக் கொண்டாட்டத்துக்குரிய நாளாக மாற்றிவிட்டார்கள். இவர்கள் நபியின் பிறந்த தினமென்று கூறி கொண்டாட்டங்களை எடுத்தார்கள்.
ஆனால் றஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் :
நான் திங்கற்கிழமை பிறந்தேன். எனவே, நான் திங்கற்கிழமையிலும் வியாழக் கிழமையிலும் நோன்பு நோற்பேன் (புஹாரி)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தான் திங்கள் கிழமை பிறந்ததாகக் கூறி அந்நாளில் நோன்பு வைத்திருக்க, நபியின் பிறந்த தினம் எனக் கூறிக் கொண்டு உண்டு மகிழ்ந்து கொண்டாடுகின்றவர்கள் எந்த அடிப்படையில் அந்த நபியைப் பின்பற்றுகிறார்கள்?
இவ்வாறு இஸ்லாமிய உம்மத்தினுள் குழப்பத்தை ஏற்படுத்திய யூதர்களின் கூட்டமான பாத்திமியாக்கள்தான் ஜாமியதுல் அஸ்ஹரை உருவாக்கினார்கள். அத்துடன் அந்த கலாசாலையில் அனைத்து வழிகெட்ட பிரிவுகளின் அடிப்படைக்கும் அஸ்திவாரம் அமைத்துக் கொடுத்தார்கள்.
அக்கலாசாலையில் Phd, M.A, B.A போன்ற கல்வித் தரங்களுக்கான பீடங்களையும் உருவாக்கிக் கொடுத்தார்கள். அங்கே கல்வி கற்பவர்களுக்கு சான்றிதழ்களைக் கொடுத்து உலகின் பல பாகங்களிலும் அவர்களை உலமாக்களின் பெயர்களில் அனுப்பிவிட்டார்கள்.
வழிகெட்ட பிரிவுகளில் உருவாகிய இத்தகைய உலமாக்களை கல்வி சுமந்த அஹ்லுஸ்ஸுன்னாவின் உலமாக்கள் விமர்சனம் செய்ததோடு தங்களின் நூல்களில் இவர்களுக்கு வழிகேடர்கள் என்று பட்டத்தையும் கொடுத்தார்கள்.