Skip to content
Part 2 of 5

பக்கம் -2.

நோன்புப் பெருநாள் உரை 1442 ஹி (2021) - எழுத்து வடிவம்

எல்லா காலங்களிலும் இஸ்லாமிய உம்மத்தின் ஒற்றுமை சீர்குழைவதற்கு குழப்பம் செய்பவர்களும், மார்க்கத்தின் தெளிவு இல்லாதவர்களும் அல்லாஹ்வின் சட்டங்களில் முந்திக் கொள்வது தான்  காரணம் ஆகும். ரஸூலுல்லாஹ்வின் தோழர்கள் இந்த மார்க்கத்தை பின்பற்றியது போன்று நாமும்  குழப்பம் செய்யாமல், தர்க்கம் செய்யாமல், அறிவை புகுத்தாமல், சர்ச்சைகளை உருவாக்காமல், பிடிவாதம் காட்டாமல் செவியேற்று பின்பற்றுவோம் என்ற அடிப்படையில் மார்க்கத்தை பின்பற்ற  முன் வர வேண்டும்.

عمرُ بنُ الخطابِ فقال رَضينا باللهِ ربًّا وبالإسلامِ دينًا وبمحمدٍ نبيًّا

உமர் رضی الله عنه அவர்கள் கூறுவார்கள்: அல்லாஹ்வை இரட்சகனாகவும், இஸ்லாமை மார்க்கமாகவும், முஹம்மதை அல்லாஹ்வின் தூதராகவும் நான் திருப்தி கொண்டேன். (தஃப்ஸீர் அத்-தபரி 9/17)


இவ்வாறு தான் சஹாபாக்கள் மார்க்கம் என்று தெரிந்துவிட்டால், அல்லாஹ்வும் ரஸுலும் கடமையாக்கியது என்று அறிந்து விட்டால் வேற்றுமை இன்றி  அதனை திருப்தியுடன் செயல்பட முன்வந்தார்கள். மார்க்கத்தின் எந்த ஒரு விஷயத்திலும் சஹாபாக்கள் ஒற்றுமை இன்றி செயல்பட்டதாக வரலாறு கிடையாது.


சில நேரங்களில் ஒரு சஹாபிக்கு கிடைத்த ஹதீஸ் மற்ற சஹாபாக்களுக்கு கிடைக்காமல் இருக்கும் அந்த நேரங்களில் அவர்கள் அவரவர் பெற்று கொண்ட ஹதீஸ்கள் அடிப்படையில் மார்க்கத்தை பின்பற்றினார்கள். ஆனாலும் அவர்கள் பின்பற்றுவதற்கு முரணாக ஏதேனும் ஹதீஸ் அல்லாஹ்வின் தூதர் ﷺ  அவர்கள் அறிவித்ததாக கிடைத்து விட்டால் அல்லாஹ்வின் தூதரின் ஹதீஸிற்கு முக்கியத்துவம் கொடுத்து அதனை பின்பற்றுவார்கள்.


இவ்வாறு அவர்கள் வாழ்ந்ததன் காரணத்தினால் தான் அறியாமையில் இருந்து அறிவார்ந்த சமூகமாக மாறினார்கள். தானும் அறியாமையில் இருந்து சுத்தமாகி தன் குடும்பத்தையும் சுத்தமாக்கி அல்லாஹ்வின் ரஹ்மத்திற்கும் பரக்கத்திற்கும் பாக்கியமுள்ளவர்களாக ஆனார்கள்.


அந்த சஹாபாக்கள் பூமியின் எந்த பகுதிக்கு சென்ற போதிலும் அவர்கள் இஸ்லாத்தை தூய வடிவில் சொன்னார்கள், மக்கள் மத்தியில் இஸ்லாத்தின் வெளிச்சத்தை ஏற்படுத்தினார்கள், மக்கள் மத்தியில் சமாதானமும் நிம்மதியும் பரவுவதற்கு வழி வகுத்தார்கள். தம் குடும்பங்களில் இஸ்லாத்தை எத்தி வைத்து அவர்கள் குழந்தைகளை மார்க்க அறிஞர்களாக ஆக்கினார்கள். அவர்கள் காலத்தில் அவர்கள் நாட்டில் மட்டுமல்லாமல் உலகின் பல்வேறு பகுதிகளிலும் மறுமை நாள் வரைக்கும் இஸ்லாம் பரவுவதற்கு காரணமாக இருந்தார்கள்.