பக்கம் - 5
நோன்புப் பெருநாள் உரை 1442 ஹி (2021) - எழுத்து வடிவம்
இந்த நோய் என்பது ஒருவரின் மூச்சு காற்றின் மூலம் பரவ கூடியதாக இருக்கின்றது. மேலும் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவி தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கின்றது. எனவே நீங்கள் இதில் அலட்சியமாக நடந்து கொள்ள வேண்டாம். உங்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகாமாக இருந்து உங்கள் மூலம் பிறருக்கு பரவி அவருக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தால், அவர் நோயால் தாக்கப்பட்டு மரணத்தை சந்திக்கலாம். எனவே அந்த பாவத்திற்கு நீங்கள் ஆளாகி விடாதீர்கள் என்பதையும் உணர்ந்து இஸ்லாத்தின் சட்டங்கள் அடிப்படையிலும் ரஸுலுல்லாஹ் காட்டி தந்த சட்டங்களை உறுதியாக பின்பற்ற வேண்டும்.
யாருடைய மரணத்திற்கும் நாம் காரணமாகி விடக் கூடாது என்பதை விளங்கி நம் மூக்கையும், வாயையும் மறைத்துக் கொள்வது அவசியமாகும்.
ஏன் நாம் இழுக்கும் மூச்சு காற்றின் மூலமோ அல்லது நாம் வெளியிடும் மூச்சு காற்றின் மூலமோ இந்த நோய் நம்மை தாக்கவும் நம்மிலிருந்து பிறரை தாக்கவும் வாய்ப்புள்ளது. பிறரை இந்த நோய் தாக்குமானால் அவர் நோயாளியாகி விடுகிறார் பின்னர் அதனால் மரணமும் அடைந்தால் அதற்கு நாம் காரணமாகி விடக் கூடாது என்பதை விளங்கி நாம் நபியின் வழிமுறையை உறுதியாக பின்பற்ற வேண்டும். மேலும் ரஸுலுல்லாஹ் கூறினார்கள்:
لاَ يُورِدُ مُمْرِضٌ عَلَى مُصِحٍّ
நோய்வாய்ப்பட்ட ஒருவரை ஆரோக்கியமாக இருக்கும் ஒருவரிடம் அழைத்துச் செல்லக்கூடாது.
(ஸஹீஹ் முஸ்லீம்)
எனவே தங்கள் குடும்பங்களைத் தவிர்த்து ஏனைய குடும்பங்களுடன் கலந்து கொள்வது இன்றைய காலத்தின் இஸ்லாம் தடுக்கின்றது என்பதை தெரிந்துக் கொள்ளுங்கள். அதே போன்று நம் குடும்பத்தில் ஒருவர்க்கு நோய் ஏற்பட்டு இருந்தாலும் அவரையும் தனிமை படுத்துவது இஸ்லாமிய சட்டமாக இருக்கின்றது என்பதையும் விளங்கிக் கொள்ளுங்கள்.
சில நாடுகளில் சுகாதார அமைச்சகம் இந்த தனிமை படுத்துதல் வழிமுறையை பின்பற்றுகின்றார்கள் நாம் அவர்களுக்கு நன்றி கூறிக் கொள்கின்றோம். அவர்கள் செய்கின்ற சேவை முழு மனித சமுகத்திற்கு செய்யும் சேவையாகும். இந்த சட்டங்களை மதித்து நாம் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். நம் குடும்பங்களையும் நம் மக்களையும் இந்த நோயில் இருந்து தற்காத்துக் கொள்ள வேண்டும். எனவே தான் வீட்டை விட்டு வெளியேறும் போது மூக்கையும், வாயையும் மறைக்கும் விதத்தில் முகக் கவசங்களை நாம் அணிய வேண்டும். மேலும் தரமான முகக் கவசங்களை அணிந்து நம்மையும் நோயில் இருந்து தற்காத்துக் கொள்ள வேண்டும். மேலும் பிறர்க்கும் நோய் பரவ காரணமாகாமல் அவர்களின் மரணத்திற்கு காரணமாகி பாவத்தை சுமக்காமல் அல்லாஹ் நம்மை பாதுகாக்க வேண்டும். எனவே இந்த கட்டுப்பாடுகளை பின்பற்றிக் கொள்ளுங்கள் இதுவே இந்த பெருநாள் தினத்தில் உங்களுக்கு உபதேசமாக எடுத்துரைக்க ஆசைப்பட்டதாகும்.