Skip to content
Part 3 of 5

பக்கம் - 3

நோன்புப் பெருநாள் உரை 1442 ஹி (2021) - எழுத்து வடிவம்

சத்திய பாதை இந்த பூமியில் ஒன்று இருக்குமென்றால் அதுவாகும் ரஸூலுல்லாஹ்வும் அவர்களுடைய ஸஹாபாக்கள் பின்பற்றிய பாதை. இதை தவிர உள்ள ஏனைய பாதைகள், தர்க்க வாதங்கள் இவை அனைத்தையும் பற்றி அல்லாஹ்வின் தூதர் கூறியதே போதுமாக இருக்கின்றது.


நபி ﷺ கூறினார்கள்


وَإِنَّ أُمَّتِيِ سَتَفْتَرِقُ عَلَى ثَلاَثٍ وَسَبْعِيْنَ مِلَّةً، كُلُّهَا فِي النَّار إِلاَّ مِلَّةٍ وَاحِدَة: قِيْلَ مَنْ هِيَ يَا رَسُولَ اللهِ قَالَ : مَا أَنَا عَلَيْهِ اليَوْمَ وَأَصْحَابِي كتاب الشريعة للآجري


எனது உம்மத் 73 கூட்டங்களாகப் பிரியும். அவை அனைத்தும் நரகம் செல்லும், ஒன்றைத் தவிர. அல்லாஹ்வின் தூதரே அவர்கள் யார்? என்று கேட்கப்பட்டபோது, அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் பின்வருமாறு பதில் சொன்னர்கள்: இன்று நானும் எனது தோழர்களும் எதன் மீதிருக்கின்றோமோ அதில் இருப்பவர்கள். (அஷ்-ஷரீஆ இமாம் அல் ஆஜுர்ரி)

இந்த கேள்விக்கு நபி ﷺ அவர்கள் கூறிய பதில் எமக்கு நேர்வழியின் அடிப்படையை எடுத்துக் காட்டுகிறது. இதனை அறிந்து நாங்கள் அழைக்கின்றோம் முஸ்லிம் சமூகத்தை நோக்கி நீங்கள் உங்கள் சமூக பழக்க வழக்கங்களை விட்டு, தர்க்க வாதங்களை விட்டு, மத்ஹப் வழிமுறையை விட்டு ஏனைய தரீக்காக்களை விட்டு அல்லாஹ்வின் தூதரின் தரீக்காவிற்கு திரும்பி வாருங்கள், அல்லாஹ்வின் தூதரின் மத்ஹபிற்கு திரும்பி வாருங்கள். அல்லாஹ்வின் தூதர் காட்டி தந்த அல்லாஹ்வின் நம்பிக்கையின் பக்கம் வாருங்கள். அல்லாஹ்வின் தூதர் காட்டி தந்த குடும்ப வாழ்க்கையை பின்பற்றி அந்த வழிமுறையில் குடும்பங்களை வளர்க்க முன் வாருங்கள்.


நபி ﷺ கூறினார்கள்


تَرَكْتُ فِيكُمْ أَمْرَيْنِ لَنْ تَضِلُّوا مَا تَمَسَّكْتُمْ بِهِمَا: كِتَابَ اللهِ وَسُنَّةَ نَبِيِّهِ


எனக்கு பின்னால் இரண்டு விஷயங்களை நான் விட்டு செல்கின்றேன் நீங்கள் அதை பற்றி பிடிக்கும் காலமெல்லாம் வழி தவற மாட்டீர்கள்."அல்லாஹ்வின் வேதமும் என்னுடைய வழிமுறையும் (ஸுன்னாஹ்வும்)". இமாம் அல்பானி رحمه الله  அவர்கள் இதனை ஆதாரப்பூர்வமானது என்று மிஷ்காத் அல்-மஸாபீஹ் எண் 186 ல் பதிவு செய்துள்ளார்கள்.


மற்றோரு அறிவிப்பில் " அல்லாஹ்வின் வேதமும்,என்னுடைய குடும்பத்தார் வழிமுறையும் என்றார்கள்.


ரஸுலுல்லாஹ்வின் ஸுன்னாஹ் என்பது அந்த ஸஹாபாக்களை அறியாமை காலத்தின் மடமையில் இருந்து மட்டும் வெளி கொண்டு வராமல் கல்வியுள்ள, ஈமானுள்ள, ஞானமுள்ள சமூகமாக மாற்றியது. இஸ்லாத்தின் வெளிச்சம் அன்றைய காலத்தில் இருந்து மறுமை நாள் வரை உலகின் பல்வேறு பகுதியில் பல்வேறு மக்களின் மத்தியில் பரவுவதற்கு காரணமாக அல்லாஹ் سبحانه وتعالى அவர்களை அமைத்து வைத்து விட்டான்.