Skip to content
Part 1 of 5

பக்கம் - 1

நோன்புப் பெருநாள் உரை 1442 ஹி (2021) - எழுத்து வடிவம்

ஈதுல் ஃபித்ர் குத்பா 1442ஹி (2021)

ஷெய்க் யஹ்யா ஸில்மி அஸ்-ஸைலானி حفظه الله

بــــــــــــــــســـــم الله الرحـــــــمــــن الرحـــــــــيــم

الحمد لله رب العالمين والصلاة والسلام على من لا نبي بعده اما بعد

அல்லாஹ்வின் நல்லடியார்களே! அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் கூறினார்கள்:

عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ‏ الصَّوْمُ يَوْمَ تَصُومُونَ وَالْفِطْرُ يَوْمَ تُفْطِرُونَ وَالأَضْحَى يَوْمَ تُضَحُّونَ ‏

நோன்பு நோற்பது மக்கள் நோன்பு நோற்கும் தினம் தான் நோன்பாகும், ஃபித்ரின் (நோன்புப் பெருநாளின்) தினம் மக்கள் ஃபித்ர் (நோன்புப் பெருநாள் கொண்டாடும்) தினம் தான் ஃபித்ர் ஆகும். அழ்ஹாவின் (ஹஜ் பெருநாளின்) தினம் மக்கள் அழ்ஹா (ஹஜ் பெருநாள் கொண்டாடும்) தினம் தான் அழ்ஹாவாகும். (சுனன் அத்- திர்மிதி) இமாம் அல்பானி رحمه الله  அவர்கள் இதனை ஆதாரப்பூர்வமானது என்று ஸஹீஹ் வ ழயீஃப் சுனன் அத்-திர்மிதி எண் 697 ல் பதிவு செய்துள்ளார்கள்.

மேலும் அல்லாஹ் سبحانه وتعالى அல்-குர்ஆனில் கூறுகின்றான்:

وَاعْتَصِمُوا بِحَبْلِ اللَّهِ جَمِيعًا وَلَا تَفَرَّقُوا

மேலும், நீங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அல்லாஹ்வுடைய (வேதம் என்னும்) கயிற்றை பலமாகப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள். நீங்கள் பிரிந்துவிட வேண்டாம். (4:103)

நாம் எந்த காரணத்தினாலும் அல் குர்ஆணையும் ஸுன்னாஹ்வையும் விட்டு பிரிவதற்கு மார்க்கத்தில் அனுமதி கிடையாது. நாம் வாழும் நாடு வேறுபட்டு இருந்தாலும், அரசியல் மாற்றங்கள் இருந்தாலும் இதனைக் கொண்டு மார்க்கத்தில் வேறுபாடு காட்ட கூடாது. இதனை அறிந்து நாம் அனைத்து முஸ்லீம் சமூகத்தை அழைக்கின்றோம்.


அல்லாஹ் மனிதர்களுக்கு தரும் தகவல்களில் ஒன்று பிறை அதை அவன் எப்போது எந்த இடத்தில் காட்ட நாடுகின்றானோ அதனை காட்டுகின்றான். அவ்வாறு அவன் பிறையை வெளிப்படுத்திவிட்டால் அப்போது அனைத்து முஸ்லிம்கள் மீது கடமையாகிறது. அல்லாஹ் அல் குர்ஆனில் எடுத்துகாட்டுவது போன்று.


فَمَن شَهِدَ مِنكُمُ ٱلشَّهۡرَ فَلۡيَصُمۡهُۖ

உங்களில் யார் இந்த மாதத்தை சாட்சி பெற்று கொள்கின்றார்களோ அவர்கள் நோன்பு நோற்கட்டும். (2:185)

மேலும் அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் கூறுகின்றார்கள்:

 فَإِنْ شَهِدَ شَاهِدَانِ فَصُومُوا وَأَفْطِرُوا

இரண்டு நபர்கள் சாட்சி பகர்ந்தால் அதைக் கொண்டு நோன்பு வையுங்கள், நோன்பை விட்டுவிடுங்கள். (சுனன் நஸாயீ) இமாம் அல்பானி رحمه الله  அவர்கள் இதனை ஆதாரப்பூர்வமானது என்று ஸஹீஹ் வ ழயீஃப் சுனன் நஸாயீ எண் 2116 ல் பதிவு செய்துள்ளார்கள்.

சாட்சி பெற்றுக் கொள்ளுதல் இரண்டு அடிப்படையில் அமைய முடியும் நாம் கண்ணால் காண்பதும் அல்லது பிறை கண்ட தகவலை பிறர் அறிவிப்பதன் மூலம் நாம் தெரிந்து கொள்வது. அவ்வாறு நாம் பிறையை நோக்கும் போது மேற்கூறிய அடிப்படையில் சாட்சியம் கிடைத்து விட்டதென்றால் அல்லாஹ்வின் கட்டளைக்கும், அல்லாஹ்வின் தூதரின் கட்டளைக்கும் இணங்க நாம் அதனை செயல்பட வேண்டும். இது முஸ்லீம் உம்மத்தின் மீீது கடமையாகும்.