Skip to content
Part 4 of 5

பக்கம் - 4

நோன்புப் பெருநாள் உரை 1442 ஹி (2021) - எழுத்து வடிவம்

ஸஹாபாக்களை அல்லாஹ் سبحانه وتعالى இந்த நிலைக்கு மாற்றினான். ஏனென்றால் அவர்கள் அல்லாஹ்வின் திருப்திக்கு முன்னுரிமை கொடுத்தார்கள், குழப்பங்களைத் தவிர்ந்தார்கள். மேலும் பிடிவாத குணங்களை தவிர்ந்து, ஜாஹிலிய்யா கால செயற்பாடுகளை தவிர்ந்து, பரம்பரை பரம்பரையாக பழிவாங்கி வந்த அந்த குணத்தில் இருந்து மாறினார்கள். மேலும் ஒருவருக்கு ஒருவர் சகோதரர்களாக சத்தியத்திற்கு ஒத்துழைத்து, மார்க்கத்தில் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கொடுக்க வேண்டிய உரிமையை கொடுத்தார்கள்.


இன்றைக்கு வாழும் மக்களும், எதிர்காலங்களில் மார்க்கத்தை பின்பற்ற ஆசைப்படும் மக்களும் எவ்வாறு சஹாபாக்கள் அல்லாஹ்வின் வார்த்தைக்கும் நபி ﷺ அவர்களின் வார்த்தைக்கு முக்கியத்துவம் கொடுத்தார்களோ அவ்வாறு முன்னுரிமை கொடுக்கும் போது அல்லாஹ்வின் உதவியை பெற்றுக் கொள்ள முடியும்.


அல்லாஹ் سبحانه وتعالى அல்-குர்ஆனில் கூறுகின்றான்.

يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓاْ إِن تَنصُرُواْ ٱللَّهَ يَنصُرۡكُمۡ وَيُثَبِّتۡ أَقۡدَامَكُمۡ

நீங்கள் அல்லாஹ்விற்கு வெற்றி கொடுத்தால் அல்லாஹ் உங்களுக்கு வெற்றி கொடுப்பான், உங்கள் பாதங்களை உறுதியாக்கி வைப்பான். (47:7)


அல்லாஹ்வின் இந்த வாக்கு மறுமை நாள் வரை வருகின்ற மனிதர்களுக்கும் ஜின்களுக்கும் அல்லாஹ் கூறுகின்றான். எனவே பிற மக்களை காரணம் காட்டி அல்லாஹ்விற்கு நீங்கள் மாறு செய்யாதீர்கள், அல்லாஹ்வின் கட்டளையை செயல்படுவதிலும் அல்லாஹ்வின் தூதரின் வழிமுறையை ஸுன்னாஹ்வை பின்பற்றுவதில் உறுதியாக நடந்துக் கொள்ளுங்கள்.

அல்லாஹ்வின் நல்லடியார்களே இன்றைய காலத்தில் கொரோனா நோய் தொற்று பரவி கொண்டு இருக்கின்றது. இந்த நேரத்தில் நாம் நபி ﷺ  அவர்களின் வழிமுறையின் அடிப்படையில் வாழ வேண்டும்.  நீங்கள் இருக்கும் நாட்டில் நோய் பரவும் என்றால் அந்த நாட்டை விட்டு வெளியேற வேண்டாம் என்று நபி ﷺ  அறிவுறுத்தி இருக்கின்றார்கள்.

நபி ﷺ அவர்கள் கூறினார்கள்:

‏ إِذَا سَمِعْتُمْ بِالطَّاعُونِ بِأَرْضٍ فَلاَ تَدْخُلُوهَا، وَإِذَا وَقَعَ بِأَرْضٍ وَأَنْتُمْ بِهَا فَلاَ تَخْرُجُوا مِنْهَا‏

ஓர் ஊரில் கொள்ளைநோய் இருப்பதாக நீங்கள் செவியுற்றால் அங்கு நீங்கள் செல்லாதீர்கள். நீங்கள் ஓர் ஊரில் இருக்கும்போது அங்கு கொள்ளைநோய் ஏற்பட்டுவிட்டால் அந்த ஊரிலிருந்து வெளியேறாதீர்கள். (ஸஹீஹ் அல்-புகாரி 5728)

ரஸுலுல்லாஹ் இந்த இடத்தில்  நோயாளியாக இருப்பவர்தான் நாட்டை விட்டு வெளியேற கூடாது என்று தடுக்க  வில்லை. மாறாக   இந்த அறிவுரை அனைவருக்குமாகும். நாம் வாழும் ஊரில் நோய் பரவி இருந்தால் அந்த ஊரை விட்டு வெளியேற கூடாது என நபி  ﷺ அவர்கள் கூறுவதில் மிகுந்த ஞானம் உள்ளது. இதனை இன்று அறிவியல் ஆராய்ச்சிகள் கண்டுபிடித்து உங்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்க, நோய் தொற்று உங்களிடத்தில் இருக்குமென்றால் நீங்கள் பயணிக்கும் போது உங்கள் மூலம் மற்றவர்க்கு நோய் பரவ காரணமாகி விடும் எனவே பிரயாணங்களை தவிர்க்க வேண்டும் என்கின்றார்கள். நாம் ரஸுலுல்லாஹ்வின் இந்த ஸுன்னாஹ்வை உறுதியாக பின்பற்ற வேண்டும்.