பக்கம் 2
மேலும் அல்லாஹ்வின் தூதர் கூறினார்கள்,
لقول النبي ﷺ: صوموا لرؤيته وأفطروا لرؤيته؛ فإن غم عليكم فأكملوا العدة ثلاثين (رواه مسلم)
"பிறையை பார்த்து நோன்பு வைத்துக் கொள்ளுங்கள். பிறையை பார்த்து நோன்பை விடுங்கள். மேக மூட்டமாக இருந்தால் மாதத்தை 30 ஆக பூர்த்தி செய்யுங்கள்."(ஸஹீஹ் முஸ்லீம்)
ﷺ أنه قال: فإن شهد شاهدان فصوموا وأفطروا (رواه أحمد)
இரண்டு முஸ்லிம்கள் சாட்சி கூறினால் அதை கொண்டு நோன்பு வைத்துக் கொள்ளுங்கள் நோன்பை விட்டு விடுங்கள்." (முஸ்னத் அஹ்மது)
இதுவே மார்க்கத்தின் அடிப்படையாக ரஸூலுல்லாஹ் முஸ்லீம் மக்களுக்கு எடுத்துக்காட்டுகின்றார்கள். அல்-குர்ஆனிலும், அஸ்-ஸுன்னாஹ்விலும் முஸ்லிமின் சாட்சியை மறுப்பதற்கும், ஏற்றுக்கொள்ளாமல் இருப்பதற்கும் ஒரு சிறிய ஆதாரமும் கிடையாது.
عَنِ ابْنِ عُمَرَ، قَالَ تَرَاءَى النَّاسُ الْهِلاَلَ فَأَخْبَرْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم أَنِّي رَأَيْتُهُ فَصَامَهُ وَأَمَرَ النَّاسَ بِصِيَامِهِ
இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்:
மக்கள் (ரமழானின்) பிறை காண முயற்சித்தார்கள். நான் ரஸூலுல்லாஹ்விடம் பிறை கண்டதாக தெரிவித்தேன். ரஸூலுல்லாஹ் நோன்பு நோற்றார்கள். மக்களையும் நோன்பு நோற்குமாறு ஏவினார்கள். (அபூ தாவுத்)
இவ்வாறு பிறை கண்ட தகவலை பெற்று கொண்டால் அதனை செயல்படுவது ரஸூலுல்லாஹ்வின் கட்டளையும், செயற்பாடும் ஆகும். ஷவ்வாலின் பிறை கண்ட பிறகு ஷவ்வாலின் முதல் தினமாகிய பெருநாள் தினத்தன்று நோன்பு நோற்பது ஹராமாகும். மேலும் அன்று பெருநாள் தொழவில்லை என்றால் அதனுடைய பாவத்தையும் சுமக்க நேரிடும். இன்னும் அல்லாஹ்விடத்தில் பதில் கொடுப்பது கடமையாக இருக்கின்றது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.
பொதுவாக மத்ஹப் ரீதியாக பெருநாள் தொழுகை என்பது ஸுன்னாஹ் முஅக்கதா என்று கூறியதால் தான் மக்கள் இதனை சாதரணமாக எடுத்துக் கொண்டார்கள். நாம் அனைவரும் இங்கு ஒரு விஷயத்தை விளங்கிக்கொள்ள வேண்டும் ஜுமுஆ தொழுகையும் மற்ற ஐந்து வக்து தொழுகையும் மாதவிடாய் பெண்ணிற்கு கடமையாகாது. ஆனாலும் பெருநாள் தொழுகைக்கு மாதவிடாய் பெண் தொழுமிடமாகிய முஸல்லாஹ்விற்கு வந்து கலந்து கொள்வது கடமையாகும்.
ஒரு பெண்மணி அல்லாஹ்வின் தூதரிடத்தில் தன்னிடம் ஜில்பாப் இல்லை, பெருநாள் தொழுகைக்கு எவ்வாறு வருவது என்று கேட்டார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் உன்னுடைய சகோதரியின் ஜில்பாபை பகிர்ந்து கொண்டு முஸல்லாவில் பங்கு பெற்று கொள் என்று கட்டளையிட்டார்கள்.
இவ்வாறு அல்லாஹ்வின் தூதர் யாருக்கும் விதி விலக்கில்லாமல் இரண்டு பெருநாள் தொழுகையிலும் கலந்து கொள்ள கட்டளையிடுகிறார்கள். ஐந்து நேர தொழுகையை விடவும் ஜூம்ஆ தொழுகையை விடவும் அல்லாஹ்வின் தூதர் பெருநாள் தொழுகைக்கு பெண்கள் கலந்து கொள்ள வேண்டுமென்று கட்டளையிட்டுள்ளார்கள். அவ்வாறென்றால் அதன் முக்கியத்துவத்தையும் அதன் கடமையும் நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.
மாறாக மத்ஹபுகள் இந்த தொழுகைக்கு வைத்த பெயர்களையும் காரணங்களையும் காட்டி அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள கூடாது. மத்ஹபுகளின் வேறுபாட்டின் காரணங்களாலும், வெவ்வேறு கருத்துக்கள் மக்கள் மத்தியில் பரப்பப்டுவதாலும் தான் ரஸூலுல்லாஹ் பிறை விஷயத்தில் செயல்பட்ட வழிமுறையும் மற்ற சுன்னாக்களும் முஸ்லீம் மக்கள் மத்தியில் பரவலாக அறியப்படவில்லை. மேலும் நாம் ரஸூலுல்லாஹ்வின் வழிமுறையில் இருந்தும் தூரமாகி கொண்டே போகிறோம் என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.