Skip to content
Part 1 of 4

பக்கம் 1

2020 ஈதுல் ஃபித்ர் குத்பா

2020 ஈதுல் ஃபித்ர் குத்பா

ஷெய்க் யஹ்யா ஸில்மி அஸ் ஸைலானி ஹபிழஹுல்லாஹ்

بــــــــــــــــســـــم الله الرحـــــــمــــن الرحـــــــــيــم

الحمد لله رب العالمين والصلاة والسلام على من لا نبي بعده اما بعد

இன்று மே 23 2020 சனிக்கிழமை ஈதுல்  ஃபித்ரின் தினம் ஆகும். மொரித்தீனியா என்ற நாட்டில் பிறை கண்டதை 40 உலமாக்கள் சாட்சி பகிர்ந்து அங்குள்ள உலமாக்களும் முஸ்லீம் மக்களும் இன்று (மே 23 2020 சனிக்கிழமை) பெருநாள் தினமாக கொண்டாட முடிவெடுத்து இருக்கின்றார்கள்.அதே போன்று முஸ்லீம் நாடாகிய சொமாலிய நாட்டிலும் இன்று பெருநாள் தினமாக அறிவித்து இருக்கின்றார்கள்.

அதே போன்று இன்னும் சில நாடுகள் பிறை கண்ட தகவலை ஏற்று இன்று பெருநாளை அறிவித்து இருக்கிறார்கள். இவ்வாறு முஸ்லிம்கள் பல நாட்டில் தங்கள் கடமையை உணர்ந்து இன்று பெருநாள் கொண்டாட முன்வந்து விட்டார்கள்.

அல்லாஹ் சுபுஹானவதஆலா அல் குர்ஆனில் கூறுகின்றான்

فَمَن شَهِدَ مِنكُمُ ٱلشَّهۡرَ فَلۡيَصُمۡهُۖ

உங்களில் யார் இந்த மாதத்தை சாட்சி பெற்று கொள்கின்றார்களோ அவர்கள் நோன்பு நோற்கட்டும்.

எனவே நாம் பிறை கண்ட சாட்சியை பெற்று கொண்டால் அதைச் செயல்படுவது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாகும். அதவாது ரமழான் ஆரம்பத்தில் பிறை கண்ட சாட்சியை பெற்றுக்கொண்டால் நோன்பு நோற்பதும் ரமழான் இறுதியில் பிறை கண்ட சாட்சியை பெற்றுக்கொண்டால் நோன்பை முடித்து பெருநாள் கொண்டாட்டதத்தை ஆரம்பிப்பதும் ஆகும்.

நம்முடைய பெருநாள் தினத்தின் கொண்டாட்டத்தில் முதலாவது பெருநாள் தொழுகையை தொழுவதாகும். பெருநாள் தொழுகையை நிலைநாட்டுவதில் அடிப்படையாக இருப்பது அந்த மாதத்தின் பிறையை சாட்சியம் பெற்றுக்கொள்வது.

அல்லாஹ் சுபுஹானவதஆலா மேல்குறிப்பிட்ட வசனத்தில் யார் இம்மாதத்தை கண்டு கொண்டாரோ அவர் நோன்பு நோற்கட்டும் என்று கூறவில்லை. மாறாக யார் சாட்சி பெற்று கொள்கின்றாரோ அவர் நோன்பு நோற்கட்டும் என்று தான் அல்லாஹ் கூறுகிறான். எனவே சாட்சி பெற்றுக்கொள்ளுதல் என்பது நாம் பிறையை  கண்ணால் காண்பதும், பிற முஸ்லிம்  உறுதியாக பிறை கண்டதை சாட்சியம் கூறிய தகவலை நாம்  பெற்று கொண்டாலும் அதை செயல்படுவதாகும். எனவே சாட்சி பெற்று கொள்வதில் பிறர் கண்ட பிறையை ஏற்றுக் கொள்வதும் உள்ளடங்கும் என்பதை நாம்  இங்கு உணர்ந்து கொள்ள வேண்டும்.