Skip to content
Part 3 of 4

பக்கம் 3

2020 ஈதுல் ஃபித்ர் குத்பா

முஸ்லீம்களே! அல்லாஹ்வின் தூதரின் சுன்னாஹ்வை நேரடியாக பின்பற்றுங்கள். அதனை எவ்வாறு நபியும், ஸஹாபாக்களும் பின்பற்றினார்களோ அவ்வாறு பின்பற்றுவதே நம் மீது கடமையாகும் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். மேலும் உணர்ந்து கொள்ளுங்கள் எல்லா விஷயங்களுக்கும் அல்லாஹ்வின் வேதமாகிய அல்-குர்ஆனிலும் அல்லாஹ்வின் தூதரின் வழிமுறையாகிய சுன்னாஹ்விலும் பதில் இருக்கின்றது.

எத்துனை வேறுபாடுகள் அமைந்தாலும் அல்லாஹ் கூறியதை போன்று

يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اَطِيْـعُوا اللّٰهَ وَاَطِيْـعُوا الرَّسُوْلَ وَاُولِى الْاَمْرِ مِنْكُمْ‌ۚ فَاِنْ تَنَازَعْتُمْ فِىْ شَىْءٍ فَرُدُّوْهُ اِلَى اللّٰهِ وَالرَّسُوْلِ اِنْ كُنْـتُمْ تُؤْمِنُوْنَ بِاللّٰهِ وَالْيَـوْمِ الْاٰخِرِ‌ ؕ ذٰ لِكَ خَيْرٌ وَّاَحْسَنُ تَاْوِيْلًا‏

ஈமான் கொண்ட மக்களே!  நீங்கள் அல்லாஹ்விற்கு கீழ்படியுங்கள். அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள். இன்னும் உங்களில்(அல்லாஹ்விற்கும் அவன் தூதருக்கும் கீழ்படிந்து நடக்கும்) அதிகாரம் உடைய தலைவர்களுக்கு கீழ்படியுங்கள். மேலும் உங்களுக்கிடையில் வேறுபாடுகள் அமைந்தால் நீங்கள் அல்லாஹ்வின் பக்கமும் அவனுடைய தூதரின் பக்கமும் திரும்பிவிடுங்கள். நிச்சயமாக நீங்கள் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பிக்கை கொண்டோர்களாக இருந்தால். இது தான் நலவாகும். மேலும் அழகான முடிவாகும். (சூரா நிஷா :59வது வசனம்)

இதற்கு மாறாக மத்ஹப்கள் ரீதியாகவும் தர்க்கங்கள் ரீதியாகவும் வாதங்கள் ரீதியாக அதிகாரம் உள்ளவர்கள் என்று நாம் நியமித்த தலைவர்களின் முடிவுகள் தான் நம்முடைய முடிவுகள் என்று கூறுபவர்களுக்கு கியாமத் தினத்தில் அல்லாஹ்விடத்தில் எந்தவொரு பலனும் கிடையாது. மேலும் அல்லாஹ் நமக்கு அவ்வாறு முடிவுகளை எடுப்பதற்கு அதிகாரம் தரவில்லை. நாடுகளில் அதிகாரம் உள்ளவர்களாக இருந்தால் என்ன! அதிகாரம் இல்லாதவர்களாக இருந்தால் என்ன! இன்று பெருநாள் தினமாகும் அதன் தொழுகை அனைவரின் மீதும் கடமையாகும்.

அல்லாஹ் கூறியதை போன்று


فَمَن شَهِدَ مِنكُمُ ٱلشَّهۡرَ فَلۡيَصُمۡهُۖ

உங்களில் யார் இம்மாதத்தை சாட்சி பெற்று கொள்கின்றார்களோ அவர்கள் நோன்பு நோற்கட்டும்.

நேற்றைய தினத்தில் (22/05/2020, வெள்ளிக்கிழமை) சில  இஸ்லாமிய நாடுகளில் பிறை தென்படாததால் மாதாத்தை 30 ஆக பூர்த்தி செய்து (24/05/2020 ஞாயிற்றுக்கிழமை) பெருநாள் என்று அறிவித்தார்கள். ஆனாலும் மற்ற சில நாடுகளில் பிறை (22/05/2020,வெள்ளிக்கிழமை) அன்று தென்பட்டதாக காலை பொழுதில் தாமதமாக கிடைக்கப்பெற்ற தகவலை கொண்டு இன்று (23/05/2020, சனிக்கிழமை) பெருநாள் தினமாக நாமும் கொண்டாடுகின்றோம். மற்ற முஸ்லீம் மக்கள் இஸ்லாமிய நாடுகளில் வாழக்கூடியவர்களாக இருந்தும் பெருநாள் என்று அங்கு அறிவிக்காவிட்டாலும், இன்று நோன்பை திறந்து பெருநாள் தொழுவது அவர்கள் மீதும் கடமையாக இருக்கின்றது.