பக்கம் 4
இமாம் ஷாஃபி (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் கிதாபுல் உம்மில் கூறினார்கள்
உங்கள் சமூகத்தில் அதிகாரத்தில் உள்ளவர்கள் பெருநாள் தினத்தை அறிவிக்கவில்லை. பெருநாளன்று அந்த சமூக மக்கள் தொழவில்லை. ஆனாலும் பிறை கண்ட சாட்சியை பெற்றுக் கொண்டால் தனியாக தொழுவது கடமையாகும்.
பெருநாள் தொழுகையின் முக்கியத்துவத்தையும் கடமையையும் உணர்ந்ததால் தான் இத்தகைய மிகப் பெரிய ஆலிம் நமக்கு இவ்வாறு எடுத்துக் காட்டுகின்றார்கள்.
மேலும் இக்கால சூழ்நிலையில் கோரோனா என்ற ஒரு நோய் தொற்று பரவி கொண்டிருக்கிறது. எனவே இந்த நேரத்தில் தன் குடும்பத்தாருடன் ஒவ்வொருவரும் வீட்டில் தொழ வேண்டும். எல்லா மக்களையும் ஒன்று சேர்ப்பத்தை தவிர்க்க வேண்டும். இன்றைய நேரத்தில் மக்கள் அனைவரையும் ஒன்று சேர்த்து தொழவேண்டும் என்ற அவசியம் இல்லை. எனவே இந்த பெருநாளின் இரண்டு ரக்ஆத்துக்களை தொழுவது கஷ்டமான விஷயம் இல்லை.
பெருநாள் தொழுகை என்பது இரண்டு ரக்ஆத்துக்களை உடையது. முதல் ரக்ஆத்தில் 7 தக்பீரும், பின் சூரத்துள் ஃபாத்திஹாவை ஓதிய பிறகு சூரத்துள் அஃலா வை ஓதி கொள்ள வேண்டும். இரண்டாவது ரக்ஆத்தில் 5 தக்பீரும், பின் சூரத்துள் ஃபாத்திஹாவை ஓதிய பிறகு சூரத்துள் காஷியா வை ஓதி கொள்ள வேண்டும். அதன் பிறகு குத்பா கொடுக்க வேண்டும்.
குத்பாவை பற்றி ரஸூலுல்லாஹ் கூறினார்கள் "யார் விருப்பப்படுகின்றாரோ அவர் செவியேற்கட்டும் யார் விருப்பப்படுகின்றாரோ அவர் எழுந்து செல்லட்டும்"
ஆனாலும் நாம் குத்பா கொடுப்பதை தொழுகை நடத்துபவர்களுக்கு ஆர்வமூட்டுகின்றோம். ஏனென்றால் ரஸூலுல்லாஹ் தன்னுடைய ஈது தொழுகையில் குத்பாவை செய்தே இருக்கின்றார்கள். வழிமுறையில் சிறந்தது அல்லாஹ்வின் தூதரின் வழிமுறையாகும் என்பதை விளங்கி நாம் செயல்பட வேண்டும்.
அல்லாஹ்வின் தூதர் கூறினாா்கள்,
عن رسول الله ﷺ يقول: صلوا كما رأيتموني أصلي(رواه البخاري )
"என்னை எவ்வாறு தொழ கண்டீர்களோ அவ்வாறு தொழுங்கள்." (ஸஹீஹ் புகாரி)
என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
இக்கால சூழ்நிலையில் வீட்டில் பெருநாள் தொழுகையை ஜமாத்தாக நிலைநாட்டினால் அதில் குத்பாவை அமைத்துக் கொள்ளுங்கள். பெருநாள் குத்பா செய்பவர்கள் பெரிய ஆராய்ச்சிகளை பற்றி பேச வேண்டும் என்று அவசியமில்லை. அல்-குர்ஆனை திறந்து சில ஆயத்துக்களை ஒதுவதோ அல்லது ஒரு பொது உபதேசம் கொடுப்பதோ போதுமானதாகும். இதையே உங்களுக்கு எத்திவைக்க ஆசைபட்டதாகும்.
அல்லாஹ் மிக அறிந்தவனாக இருக்கின்றான்.