பக்கம் 2
கொரோனா வைரஸ் காரணமாக கடமையான தொழுகைகளை வீட்டில் தொழுவதற்கு ஆதாரம் என்ன?
அவ்வாறே அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கூறியுள்ளார்கள்,
مَنْ سَمِعَ الْمُنَادِيَ فَلَمْ يَمْنَعْهُ مِنَ اتِّبَاعِهِ عُذْرٌ " . قَالُوا وَمَا الْعُذْرُ قَالَ خَوْفٌ أَوْ مَرَضٌ " لَمْ تُقْبَلْ مِنْهُ الصَّلاَةُ الَّتِي صَلَّى " .
யார் ஒருவர் பாங்கோசை கேட்டு ஜமாஆத் தொழுகைக்கு பள்ளிக்கு வரவில்லையோ அவருக்கு தொழுகை இல்லை, எனினும் அவருக்கு ஏதேனும் அவசியமான காரணங்கள் இருந்தாலே தவிர என்றார்கள். அவசியமான காரணங்கள் என்ன என்று கேட்கப்பட்டது. அதற்கு பதிலாக பயம் அல்லது நோய் என்று கூறினார்கள். (சுனன் அபூதாவூத்)
ஷேக் அல்பானி Iரஹிமஹுல்லாஹ்) இதனை ஆதாரப்பூர்வமானது என்று ஸஹீஹ் சுனன் அபூதாவூதில் பதிவு செய்துள்ளார்கள்.
அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கூறியுள்ளார்கள்,
أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : لَا يُورِدُ مُمْرِضٌ عَلَى مُصِحٍّ
நோய் கண்ட கால்நடையை ஆரோக்கியமான கால்நடையிடம் கொண்டுசெல்லக் கூடாது. (ஸஹீஹ் முஸ்லிம்)
இந்த ஆதாரங்களின் அடிப்படையில் தற்போதுள்ள சூல்நிலையில் பள்ளிக்குச் செல்லாமல் வீட்டில் தொழுவது அனுமத்திக்கப்பட்டதாகும்.
அல்லாஹ் மிக அறிந்தவன்.