Skip to content
Part 1 of 2

பக்கம் 1

கொரோனா வைரஸ் காரணமாக கடமையான தொழுகைகளை வீட்டில் தொழுவதற்கு ஆதாரம் என்ன?

கொரோனா வைரஸ் காரணமாக கடமையான தொழுகைகளை 

வீட்டில் தொழுவதற்கு ஆதாரம் என்ன?

ஷெய்க் யஹ்யா ஸில்மி அஸ் ஸைலானி ஹபிழஹுல்லாஹ்

بــــــــــــــــســـــم الله الرحـــــــمــــن الرحـــــــــيــم

الحمد لله رب العالمين والصلاة والسلام على من لا نبي بعده اما بعد

அல்லாஹ்வின் நல்லடியார்களே! இன்றைக்கு உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் என்ற கிருமியினால் பல மக்கள் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். மேலும் ஒவ்வொரு நாட்டின் ஆட்சியாளர்களும், மக்கள் ஒன்று கூடுவதினால் இந்த கிருமி வேகமாக பரவுகிறது என்பதை உணர்ந்து மக்கள் ஒன்று சேர்வதை தடை செய்துள்ளார்கள். இதன் அடிப்படையில் பள்ளி வாசல்கள் தற்காலிகமாக மூடப்பட வேண்டும், அதனால் மக்கள் இந்த தொற்று நோயில் இருந்து பாதுகாப்பு பெற வேண்டும் என்பதை அறிவுறித்தியுள்ளார்கள். இதனை அனைத்து முஸ்லிம்களும் பின்பற்றுவது அவசியமாகும். முஸ்லிம்கள் அவர்களுடைய வீட்டிலேயே ஜமாஆத்தாக தொழுவது தற்போது சிறந்ததாகும். மேலும் மக்கள் அவசியமில்லாமல் வீட்டை விட்டு வெளியே செல்வதை முற்றிலும் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

அல்லாஹ் அல்-குர்ஆனில் கூறுகின்றான்

وَلَا تُلْقُوا بِأَيْدِيكُمْ إِلَى التَّهْلُكَةِ

இன்னும் உங்களது கைகளை அழிவின் பக்கம் கொண்டும் செல்லாதீர்கள். (2:195)

وَلَا تَقْتُلُوا أَنفُسَكُمْ

அன்றியும் உங்களையே நீங்கள் கொள்ளாதீர்கள். (4:29)