Skip to content
Part 9 of 9

பக்கம் 9

வானவியல் பற்றி ஹஸன் அலி உமரி வெளியிட்ட அவசர கட்டுரைக்கு பதிலும், மறுப்புகளும்

நாங்கள் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் ஹதீஸின் மூலமாக வானவியல் கல்வி குஃப்ர் என்று கொடுத்த தீர்ப்பு தக்லீத் ஆகிவிட்டதா?. நாங்கள் ஷெய்க் இப்னு உசைமின் (ரஹிமஹுல்லாஹ்) மற்றும் மற்ற உலமாக்களின் கருத்துகளுக்கு முரணாக  இருப்பதால் நாங்கள் தக்லீத்வாதிகளாக ஆகிவிட்டோமா?.

ஷெய்க் இப்னு உசைமின் (ரஹிமஹுல்லாஹ்) அவர்களின் வார்த்தையை வைத்து வானவியல் கல்வி அனுமதி என்று நீங்கள் கூறுவது தக்லீத் ஆகுமா?. அல்லது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் வார்த்தையை வைத்து வானவியல் கல்வி ஹராம் என்று நாங்கள் கூறுவது தக்லீத் ஆகுமா?.

அஹ்லுஸ் ஸுன்னாஹ்வின் அறிஞர்கள் கூறுகிறார்கள்,

தக்லீது என்பது உலமாக்களின் கருத்துகளை ஆதாரம் இல்லாமல் சுமப்பதாகும்.

நாங்கள் கூறுகின்றோம் “ஷெய்க் இப்னு உசைமின் (ரஹிமஹுல்லாஹ்) அவர்களின் வார்த்தை நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் வார்த்தைக்கு முரணாகும்”. ஷெய்க் இப்னு உசைமின் (ரஹிமஹுல்லாஹ்) அவர்களின் வார்த்தைக்கு ஆதாரம் தெரியாமல் பின்பற்றும் நீங்கள் தான் உண்மையில் தக்லீதுவாதிகள்.

வானவியலால் மார்க்கத்திற்கு ஏற்பட்ட பாதிப்புகள் :

சகோதரர்களே! தொழுகையின் நேரங்களை அறிவது என்பது ஒரு வணக்கமாகும். இதனை அல்லாஹ் அவனுடைய தூதருக்கு எவ்வாறு வழிகாட்டினானோ அவ்வாறு செயல்படுவது தான் சரியானதாகும். அல்லாஹ் ஏழு வானத்தின் மேல் இருந்து இறக்கிய தொழுகை நேரங்களை முஸ்லிம்கள் மறந்துவிட்டார்கள். ஜிப்ரீல் (அலைஹிஸலாம்) அவர்கள் மூலமாக நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்கு தொழுகையின் நேரங்களை அல்லாஹ் கற்றுக் கொடுத்தான். மேலும் அதன் அடிப்படையில் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களும், ஸஹாபாக்களும் தொழுகையை நிலைநாட்டினார்கள்.

அவர்கள் நிலைநாட்டிய வழிமுறையை அல்லாஹ் ஏழு வானத்தின் மேல் இருந்து 'அவர்களை பொருந்திக் கொண்டதாக' சாட்சி பகர்ந்துவிட்டான். மேலும் அஹ்லுஸ் ஸுன்னாஹ்வின் உலமாக்கள் அவர்களின் நூற்களில் 'அவ்காதுஸ் ஸலாத் - தொழுகையின் நேரங்கள்' என்று பாடத் தலைப்பிட்டு மக்களுக்கு வழிகாட்டி இருக்கின்றனர்.

ஆனால் இன்றைக்கு இவை அனைத்தையும் விட்டு விட்டு யூதர்களும், கிறித்தவர்களும் உருவாக்கிய வானவியல் கல்வியின் மூலம் தொழுகையின் நேரங்களைத் தேர்ந்தெடுத்து நபியும், ஸஹாபாக்களுக்கும் மேல் மார்க்கத்தை பின்பற்ற வந்துவிட்டனர்.

ஷேக் அல்பானி (ரஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்கள்,

தொழுகை நேர அட்டவணை என்பது அல்லாஹ்வினால் வானத்தில் இருந்து இறக்கப்பட்டது அல்ல. மாறாக இவைகள் மனித முயற்சியால் உருவாக்கப்பட்டவை. எனவே அவைகளில் பிழைகள் இருப்பது தவிர்க்க முடியாதது. இவைகள் வான சாஸ்திரத்தை சேர்ந்தவைகளாகும்.

மக்கள் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் காட்டித்தந்த தொழுகை நேரம் அறியும் வழிமுறைகளை கைவிட்டு விட்டு இந்த வானவியல் கணக்கு வழக்குகளில் தங்கிவிட்டார்கள்.

அதேபோன்று ரமழானின் நோன்பையும் வானவியல் அடிப்படையில் பிறையை கணக்கிட்டு நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களையும், ஸஹாபாக்களையும் விட மார்க்கத்தை துள்ளியமாக பின்பற்ற வந்துவிட்டனர். அல்லாஹ் தான் இவ்வாறான வழிமுறையில் இருந்து நம்மை பாதுகாக்க வேண்டும்.

அல்லாஹ்வே மிக அறிந்தவனாக இருக்கின்றான்.