பக்கம் 8
வானவியல் பற்றி ஹஸன் அலி உமரி வெளியிட்ட அவசர கட்டுரைக்கு பதிலும், மறுப்புகளும்
நாங்கள் வானவியல் விஷயத்தில் ஹதீஸின் வார்த்தைக்கு எங்களின் கருத்தை கொடுக்கவில்லை. நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் வார்த்தை நட்சத்திரக் கல்வியைப் பொதுவாக குறிப்பிடுகிறது என்றும் ஸஹாபாக்கள் அவ்வாறே விளங்கினார்கள் என்றும், தாபியீன்களில் ஒருவரான இமாம் கதாதா (ரஹிமஹுல்லாஹ்) அவர்களின் வார்த்தையும் அதனை தெளிவாக்குகின்றது என்றும் தான் கூறுகின்றோம்.
இமாம் தாவூதி (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் "நட்சத்திரங்கள் விஷயத்தில் யார் இந்த மூன்றைத் தவிர மற்றவைகளில் தன்னை தொடர்பாக்கினாரோ, அவர் காஃபிராகி விட்டார்" என்று கூறினார்கள். ஆனால் நாங்கள் நட்சத்திர விஷயத்தில் பேசியவரை காஃபிர் என்று கூறவில்லை, மாறாக குஃப்ர் செய்துவிட்டார் என்று தான் கூறுகின்றோம்.
அல்லாஹ்வே மிக அறிந்தவனாக இருக்கின்றான்.
7. சகோதரர் ஹஸன் அலி உமரி அவா்கள் "தக்லீத் என்பது குறிப்பிட்ட உலமாக்களின் கருத்தை எடுத்து மற்ற உலமாக்களின் கருத்தை பார்க்காமல் அதை பின்பற்றுவதாகும்" என்று கூறுகிறார்.
பதில் :
சகோதரர்களே! இவ்வாறு தக்லீதை வர்ணித்தது யார்?. தக்லீதுடைய கருத்தை கூட இவர் விளங்கவில்லை. தக்லீதின் வரைவிலக்கணமே அறியாத இவர் எவ்வாறு மக்களுக்கு வழிகாட்ட முடியும்?.
தக்லீது என்பது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்கு முரணாக மற்றவர்களை பின்பற்றுவதாகும். நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் வழிமுறைக்கு எதிராக இருந்தாலும் உலமாக்களின் தவறான கருத்துகளை பின்பற்றுவதற்கு அனுமதியளிப்பது தான் தக்லீதாகும்.
குறிப்பிட்ட உலமாக்களின் கருத்தை எடுத்து மற்ற உலமாக்களின் கருத்தை பார்க்காமல் பின்பற்றுவது ஒரு நாளும் தக்லீதாகாது. குறிப்பிட்ட உலமாக்கள் அல்-குர்ஆன் அஸ்-ஸுன்னாஹ் ஸஹாபாக்களின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கியதை பின்பற்றுவது தான் இத்திபா ஆகும்.
தக்லீதை சுட்டிக்காட்ட வந்த ஹஸன் அலி உமரி அவருக்கு, ஷெய்க் இப்னு உசைமின் அவர்கள் கொடுத்த தீர்ப்பு நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் வழிமுறைக்கு முரணானது என்று விளங்க முடியவில்லை. நபியின் தீர்ப்பை விட ஷெய்க் உசைமின் (ரஹிமஹுல்லாஹ்) அவர்களின் வார்த்தைக்கு முன்னுரிமை கொடுப்பது தக்லீத் ஆகாதா?. அது தான் தெளிவான தக்லீதாகும்.