பக்கம் 7
வானவியல் பற்றி ஹஸன் அலி உமரி வெளியிட்ட அவசர கட்டுரைக்கு பதிலும், மறுப்புகளும்
நட்சத்திரங்கள் படைக்கப்பட்டதற்கு கூறிய முதல் இரண்டு விஷயங்கள் நமக்கு பயனளிக்காது. மூன்றாவதாக கூறிய 'திசை காட்டுவதற்கு' என்பது நமக்கு பயனளிக்கும். இதை தவிர மற்ற விஷயத்திற்கு நட்சத்திரத்தை பயன்படுத்துவது தவறானதாகும்.
இமாம் இப்னு ஹஜர் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் ஃபத்ஹுல் பாரியில் இதன் விளக்கத்தில் கூறுகிறார்கள்,
قال الداودي قول قتادة في النجوم حسن إلا قوله أخطأ وأضاع نفسه فإنه قصر في ذلك بل قائل ذلك كافر . الكتاب : فتح الباري
شرح صحيح البخاري 6/295
இமாம் தாவூதி (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் கூறுகிறார்கள் கதாதா (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் நட்சத்திர (நுஜூம்) விஷயத்தில் கூறியது சிறப்பானது. ஆனால் பின்வருமாறு கூறிய "தவறிழைத்து விட்டார்; தன் முயற்சியை வீணாக்கி விட்டார்" என்ற வார்த்தைகளை தவிர. இதில் அவர் குறைவாக தான் தீர்ப்பளித்துள்ளார் (சரியாக தீர்ப்பளிக்கவில்லை). ஆனால் (இந்த மூன்றைத் தவிர நட்சத்திர விஷயத்தில்) பேசுபவர் காஃபிர் ஆவார் (என்பது சரியான தீர்ப்பாகும்).
இதனை இமாம் இப்னு ஹஜர் அல்-அஸ்கலானி (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் ஃபத்ஹுல் பாரி 6வது பாகத்தில் 295வது பக்கம் குறிப்பிட்டுள்ளார்கள்.
6. ஹஸன் அலி உமரி அவா்கள் எங்களை பி.ஜேவுடன் தொடர்பாக்கி பேசினார்.
பதில் :
பி. ஜே அவா்கள் தன்னுடைய சிந்தனையினால் அல்-குர்ஆன், அஸ்-ஸுன்னாஹ்வுக்கு விளக்கம் கொடுக்கின்றவர். ஸஹாபாக்களின் விளக்கத்தை ஏற்க மறுப்பவர். மேலும் அவருடைய வழிமுறை வழிகேடானது என்று தமிழ் பேசும் மக்களுக்கு அன்றிலிருந்து இன்று வரை தெளிவுபடுத்திக் கொண்டிருக்கிறோம்.