பக்கம் 6
வானவியல் பற்றி ஹஸன் அலி உமரி வெளியிட்ட அவசர கட்டுரைக்கு பதிலும், மறுப்புகளும்
6. சகோதரர் ஹஸன் அலி உமரி குறிப்பிடுகிறார்,
அல்லாஹ் கூறுகிறான்,
وَعَلامَاتٍ وَبِالنَّجْمِ هُمْ يَهْتَدُونَ
(வழிகாட்டும்) அடையாளங்களையும் (வழி காட்டுவதற்காக அவன் அமைத்துள்ளான்). நட்சத்திரங்களைக் கொண்டும் (பிரயாணிகளாகிய) அவர்கள் வழிகளை அறிந்து கொள்கிறார்கள். (அந்நஹ்ல் : 16)
இந்த வசனத்தின் மூலம் வானவியல் அனுமதிக்கப்பட்டது ஆகும்.
பதில் :
இந்த வசனத்தை முதலில் ஸஹாபாக்கள் என்ற சமூகம் தெளிவாகவும், சரியாகவும் பின்பற்றினார்கள். இந்த வசனத்தை பின்பற்றுவதற்கு நாம் முதலாவதாக வந்தவர்களல்ல. அவர்கள் பிரயாணங்களில் வழிகளை அறிவதற்கு அதாவது நட்சத்திரங்களை கண்களினால் கண்டு திசைகளை அறிந்து கொண்டனர். வானவியல் கல்வியின் மூலம் அல்ல.
தற்பொழுது ஃபத்ஹுல் பாரியில் உள்ள விளக்கத்தை பாா்க்கலாம்.
அல்லாஹ் அல்-குர்ஆனில் கூறுகின்றான்,
وَلَقَدْ زَيَّنَّا السَّمَاءَ الدُّنْيَا بِمَصَابِيحَ
நிச்சயமாக நாம், உங்களுக்கு அருகிலுள்ள வானத்தை விளக்குகளைக் கொண்டு அலங்காரமாக்கி வைத்தோம். (67:5)
விளக்குகள் என்பது النُّجُومَ - நுஜூம் ( நட்சத்திரங்கள்) அகும்.
இந்த வசனத்திற்கு விளக்கமாக கதாதா ரஹிமஹுல்லாஹ் (அனஸ் இப்னு மாலிக் அவர்களின் மாணவர்) அவர்கள் கூறுகிறார்கள்,
وَقَالَ قَتَادَةُ : خَلَقَ هَذِهِ النُّجُومَ لِثَلاَثٍ، جَعَلَهَا زِينَةً لِلسَّمَاءِ، وَرُجُومًا لِلشَّيَاطِينِ، وَعَلاَمَاتٍ يُهْتَدَى بِهَا، فَمَنْ تَأَوَّلَ فِيهَا بِغَيْرِ ذَلِكَ
أَخْطَأَ وَأَضَاعَ نَصِيبَهُ، وَتَكَلَّفَ مَا لاَ عِلْمَ لَهُ بِهِ. رَوَاهُ الْبُخَارِيُّ تَعْلِيقًا ( كتاب بدء الخلق - بَابٌ في النُّجُومِ )
அல்லாஹ் இந்த நட்சத்திரங்களை மூன்று விஷயங்களுக்காகப் படைத்திருக்கின்றான்.
- அவற்றை வானத்திற்கு அலங்காரமாக ஆக்கியுள்ளான்.
- ஷைத்தான்களை எறிந்து விரட்டுவதற்கான கருவியாக ஆக்கியுள்ளான்.
- அவற்றின் வாயிலாக வழியறிந்து கொள்வதற்கான அடையாளங்களாக அவற்றை ஆக்கியுள்ளான். (நட்சத்திரத்தைப் பார்த்து திசையை அறிந்து கொள்வதற்கு)
நட்சத்திரங்கள் விஷயத்தில் யார் (இந்த மூன்றைத்) தவிர மற்றவைகளில் தன்னை தொடர்பாக்கினாரோ, அவர் தவறிழைத்து விட்டார். தன் முயற்சியை வீணாக்கி விட்டார், தான் அறியாத விஷயத்தில் ஈடுபட்டுத் தன்னைத் தானே சிரமத்திற்கு ஆளாக்கிக் கொண்டார்.
நூல்: ஸஹீஹ் அல்-புஹாரி ( இமாம் புஹாரி (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் 'கிதாப் படைப்பின் ஆரம்பம்' என்பதில் நட்சத்திரங்கள் என்ற 3வது பாடத் தலைப்பின் கீழ் குறிப்பிட்டுள்ளார்கள்)